!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 11 மார்ச், 2011

வாக்குச்சாவடி அமையும் பள்ளிகளை ஏப்ரல் 11ம் தேதி ஒப்படைக்க உத்தரவு


வாக்குச்சாவடி அமையும் பள்ளிகளை ஏப்ரல் 11ம் தேதி ஒப்படைக்க உத்தரவு
"ஓட்டுச் சாவடிகள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளை, 11ம் தேதி பிற்பகல் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்,'' என, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, அவர் பள்ளிக் கல்வித்துறைக்கு கூறியிருப்பதாவது: 
தமிழகத்தில் தற்போது பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. 11ம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடக்கின்றன. 13ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. ஓட்டுச் சாவடிகளுக்காக, பள்ளிகளை தேர்தல் கமிஷன் தேர்வு செய்துள்ளது. எனவே, தேர்வுப் பணிகளை முடித்து, 11ம் தேதி பிற்பகல் சம்பந்தப்பட்ட பள்ளிகளை, தேர்தல் அதிகாரிகள் வசம் ஒப்படைக்க வேண்டும். 

தேர்தல் பணிக்காக, ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, தேர்தல் கமிஷன் பயிற்சி அளித்து வருகிறதுஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், தேர்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், தேர்தல் தொடர்பான பயிற்சிகளுக்கு அவர்கள் செல்லும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இது தொடர்பான முழு விவரங்களையும், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சபீதா கூறியுள்ளார்.

செயலரின் உத்தரவு, நேற்றே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டன. 

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தப்படும் 43 மையங்களில் மட்டும் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவில்லை. 

மேலும், ஏப்ரல் 12, 13 ஆகிய இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஏப்ரல் 16ம் தேதிக்குப் பின், மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் எனவும், தமிழக அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

தேர்தல் நாளில் தேர்வுகள்: தேதிகளை மாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் ஏப்., 13ல் சட்டசபை தேர்தல் நடப்பதால், அன்று நடக்கவிருந்த 6, 7, 8, 9ம் வகுப்பு தேர்வுகளின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு தேர்வுகள், ஏப்.,11ல் துவங்கி 21ம் தேதி வரை நடைபெறும் என அட்டவணை வழங்கப்பட்டது. சட்டபை தேர்தலையொட்டி இந்த அட்டவணையில் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி ஏப்.,6ல் தமிழ் முதல் தாள், 7ல் இரண்டாம் தாள், 9ல் சுற்றுச்சூழல் கல்வி, 15ல் ஆங்கிலம் முதல்தாள், 18ல் ஆங்கிலம் இரண்டாம் தாள், 19ல் கணிதம், 20ல் அறிவியல், 21ல் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். 

இருப்பினும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு தேதிகளில் மாற்றம் செய்து கொள்ளலாம்.




Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png