புதுடெல்லி : பிஎப் கணக்கில் இருந்து பணம் பெறும் வசதி தொடரும்
புதுடெல்லி : பிஎப் கணக்கில் இருந்து பணம் பெறும் வசதி தொடரும் என்று மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 4 கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை ஓய்வுக்கால சேமிப்பாக பிஎப் என்ற பெயரில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிர்வகித்து வருகிறது. பிஎப் கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையை இடையில் பெற்றுக் கொள்ளும் வசதியை பிஎப் அமைப்பு அனுமதித்துள்ளது. இதை பயன்படுத்தி பெரும்பாலோர் குறிப்பிட்ட கால இடைவெளியில் பிஎப் கணக்கில் சேரும் தொகையில் பெரும்பகுதியை எடுத்து விடுகின்றனர்.
இதனால், அவர்களது ஓய்வு வயதுக்குப் பிறகு வாழ்க்கைக்கு நிதி வசதியில்லாமல் போகும் ஆபத்து இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் கவலை தெரிவித்தது.
‘பிஎப் பணத்தை இடையே எடுக்கும் வசதி இருப்பதால், பெரும்பாலோர் ஓய்வு பெறும்போது கணக்கில் ரூ.35,000 மட்டுமே இருக்கும் நிலை உள்ளது. இதை தவிர்க்க இந்த வசதியை நிறுத்த வேண்டும்’ என்று தொழிலாளர் நல அமைச்சகத்துக்கு நிதி அமைச்சகம் ஆலோசனை கூறியது.
ஆனால், அதை ஏற்க தொழிலாளர் நல அமைச்சகம் மறுத்து விட்டது. இதுபற்றி மக்களவையில் தொழிலாளர் நல அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று கூறுகையில், ‘‘நிதி அமைச்சகத்தின் ஆலோசனைக்கு மறுப்பு தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பிஎப் பணத்தில் ஒரு பகுதியை தொழிலாளர்கள் விரும்பும்போது திரும்பப் பெறும் வசதி தொடரும். செயல்படாத பிஎப் கணக்குகளுக்கு வட்டி அளிப்பது மார்ச் 31ல் முடிகிறது. இதுபோன்ற சுமார் 3 கோடி கணக்குகளில் 8,319 கோடி உள்ளது’’ என்றார்
.
Higher Secondary head masters, PG teachers to pursue demand after polls
Head masters of government higher secondary schools and postgraduate teachers have decided to pursue their demand of seeking an exclusive directorate for higher secondary. This is despite the High Court forbidding them from going on an indefinite strike just two days prior to the start of the Plus-Two examination.
Under the aegis of the Joint Action Committee, representatives of the Tamil Nadu Higher Secondary School's Association, Tamil Nadu Post Graduate Teachers' Association and Tamil Nadu Higher Secondary Post Graduate Teachers' Association met in Tiruchi last week and decided to pursue their demand after the elections. It was for the first time that the three associations joined hands to espouse a cause.
Their grievance is that the government has not heeded despite several representations to the serious shortcomings in the administrative system of School Education Department that neglects seniority for promotions.
The then government in 1979 had put in place a system of proportional opportunities for headmasters of high schools and higher secondary schools for promotion to post of district educational officer. Fifty per cent of high school headmasters, 25 per cent of higher secondary school headmasters, and the rest constituting direct appointees were in the proportion of reckoning to become district educational officers.
Owing to persistent protests by the headmasters and PG teachers of higher secondary schools, the State government last year altered the proportion for promotion as DEOs in the ratio of 40 per cent for high school headmasters, 35 for higher secondary school headmasters, and the rest for direct appointees. Since this arrangement also failed to address the centrality of the issue, the government had formed a one-man commission to determine the requirement for a separate directorate for higher secondary. The report could not be brought out since the model code of conduct took effect earlier than expected, official sources said.
At the State-level meeting chaired by the president of Tamil Nadu Higher Secondary Schools' Headmasters' Association D. Subramanian, the idea of separate district educational officers for secondary and higher secondary levels was mooted and deliberated upon. The DEOs for secondary level could be chosen from amongst the headmasters of government high schools. The DEOs for higher secondary must necessarily be chosen from amongst headmasters of higher secondary schools, Mr. Subramanian emphasised. He further said that when high school headmasters get promoted as DEOs despite their nil exposure to the nitty-gritty of higher secondary education, they miserably fail on the administrative front.
When there are two Assistant Elementary Educational Officers in each block under the Directorate of Elementary Education, there is no reason why the idea of two district educational officers for an educational district should not find favour with the government, he said.
– THE HINDU
விடைத்தாள் திருத்தும் பணி: ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - 12-03-2011
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்ததும் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். இப்பணியில் ஈடுபடும் பிளஸ்2 ஆசிரியர்களுக்கு தினமும் காலை, மாலையில் தலா 12 விடைத்தாள் வீதம் தினமும் 24 தாள்கள் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு தலா 15 விடைத்தாள்கள் வீதம் நாள் ஒன்றுக்கு 30 தாள்கள் வழங்கப்படும். இந்த ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணிக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையடுத்து அரசு அவர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. (அரசாணை எண்- 45, நாள்: 1.3.2011).
பிளஸ்2, ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு இதுவரை தாள் ஒன்றுக்கு வழங்கப்பட்ட 5 ரூபாயை ரூ. 7.50 ஆக உயர்த்தியுள்ளனர். பத்தாம் வகுப்பு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.4 ஐ ரூ.6 ஆக உயர்த்தியுள்ளனர். எட்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 1.50, ரூ. 2.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல இப்பணியில் ஈடுபடும் கேம்ப் அலுவலர், தொடர்பு அலுவலர், கூர்ந்தாய்வாளர், முதன்மை கண்காணிப்பாளர், துறைஅலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், பறக்கும் படையினர், வினாத்தாள் பாதுகாப்பு மைய அலுவலர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்றனர். -கல்விமலர்
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.