கடமை தவறாத ஜப்பான் ஊழியர்கள்
புகுஷிமா: கதிர்வீச்சு தாக்கம் உடலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படும் என தெரிந்தும், கடமை தவறாமல் வேலை செய்கின்றனர் புகுஷிமா அணுமின் நிலைய ஊழியர்கள். இவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள் என புகழ்கிறது அமெரிக்கா. தங்கள் நாட்டின் கடமை தவறாத ஊழியர்களை நினைத்து நாடே நெகிழ்ந்திருக்கிறது.
பூகம்ப பாதிப்பால் ஜப்பானின் புகுஷிமா அணுமின்நிலையத்தில் உள்ள அணுஉலைகள் வெகுவாக பாதிப்படைந்து அதிக கதீர்வீச்சை வெளிப்படுத்தி வருகின்றன. தற்போது அங்கு கதிர்வீச்சின் தாக்கம் மணிக்கு 400 மில்லி சிவெர்ட்ஸ் என்ற அளவில் உள்ளது. ஆயிரம் மில்லி சிவெர்ட்ஸ் கதிர்வீச்சு தாக்குதலுக்கு உள்ளானால் லுகேமியா, லிம்போமா, தைராய்டு கேன்சர் உள்பட பல நோய்கள் ஏற்பட்டு இறுதியில் மரணம்கூட ஏற்படலாம்.
கரணம் தப்பினால் மரணம் என்பது அணுஉலை விஷயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை. ஆரோக்கியத்துக்கும் உயிருக்கும் ஆபத்தான சூழ்நிலையில் வேலை பார்க்கிறோம் என்று நன்கு தெரிந்தே அங்கு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அதிக அளவில் கதிர்வீச்சு வெளியாகிறது என்று எச்சரிக்கப்பட்ட சூழ்நிலையில்கூட புகுஷிமா மின் நிலையத்தில் பணியாற்றும் 180 இன்ஜினியர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் தப்பிச் செல்ல நினைக்கவில்லை. தங்கள் உயிரையும் துச்சமாக கருதி, அணுஉலையை குளிர்விக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அவர்களது கடமை உணர்வு நாட்டுப் பற்றும் ஜப்பான் மக்களை மட்டுமல்லாமல், அங்கு மீட்பு பணிக்காக வந்திருக்கும் வெளிநாட்டு வீரர்களையும் நெகிழ வைத்திருக்கிறது. இதுகுறித்து அமெரிக்காவின் மாஜி எரிசக்தி துறை அதிகாரி ராபர்ட் அல்வரேஸ் கூறுகையில், ‘‘புகுஷிமா அணுமின் நிலைய ஊழியர்களை பார்த்தால் பெருமையாக இருக்கிறது. ஹீரோக்கள் போல பணியாற்றுகின்றனர். நாட்டுக்காக, கடமைக்காக தங்களையே தியாகம் செய்பவர்கள் ஜப்பானியர்கள் என்பதை நினைக்கும்போது உள்ளம் நெகிழ்கிறதுÕÕ என பாராட்டியுள்ளார். அமெரிக்க பேராசிரியர் வேக்போர்டு கூறும்போது, ‘‘உயிரையும் துச்சமாக கருதி பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கும் ஜப்பானிய ஊழியர்கள் ஹீரோ போல தெரிகிறார்கள். அவர்களுக்கு தலைவணங்குகிறேன்’’ என்றார்.

0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.