பிளஸ் 2 கணக்கு தேர்வில் இடம்பெற்ற பிழையான கேள்விகளுக்கு உரிய மதிப்பெண் வழங்க முடிவு சென்னை: பிளஸ் 2 கணக்கு தேர்வில் இடம்பெற்ற பிழையான கேள்விகளுக்கு விடை எழுதி இருந்தால் அந்த மாணவர்களுக்கு உரிய மதிப்பெண்களை வழங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த 2ம் தேதி தொடங்கியது. பொறியியல் படிப்புக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் பாடங்களில் ஒன்றான கணக்கு பாடத் தேர்வு நேற்று நடந்தது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதியவர்களுக்கு தமிழ் வழியிலும், மெட்ரிக்குலேஷன் முறையின் கீழ் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆங்கில வழியிலும் கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டு இருந்தன. தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி இரண்டிலும் கேள்விகளின் வரிசை மட்டுமே மாறி இருந்தன. மற்றபடி கேள்விகள்ஒன்றுதான். இந்நிலையில், ஆண்டுதோறும் வழக்கமாக இடம்பெறும் கேள்விகளை தேர்வு செய்து படித்த மாணவ மாணவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், வழக்கத்தை விட மாறாக கேட்கப்பட்டு இருந்தன. எதிர்பார்த்து படித்த கேள்விகள் இல்லாமல் போனதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ‘பகுதி-அ’வில் இடம்பெற்ற ஒரு மதிப்பெண் கேள்விகள், புளு பிரின்ட்படி இடம்பெற்ற கேள்வி என்றாலும், அவை குழப்பமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். ‘பகுதி-ஆ’வில் 6 மதிப்பெண் கேள்விகள் வழக்கமான முறையில் அமையாமல், மாற்றி கேட்கப்பட்டுள்ளது. இதுவரை கேட்கப்படாத கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டுள்ளது. குறிப்பாக 47 வது கேள்வி பாடப்புத்தகத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டது. 51 வது கேள்வியில் அச்சுப் பிழை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அடைப்புக்கு குறிக்கு மேலே இடம்பெற வேண்டிய ‘சீ’குறியீடு அடைப்புக் குறிக்கு கீழே குறிப்பிட்டு கேட்கப்பட்டதால் மாணவர்களால் பதில் எழுத முடியவில்லை. அதே போல 53, 54 ஆகிய இரு கேள்விகளும் குழப்பத்தை ஏற்படுத்தின. ‘பகுதி இ’-ல் அனைத்து 10 மதிப்பெண் கேள்விகளும் கடினமாக கேட்கப்பட்டுள்ளன. கட்டாயமாக விடை எழுத வேண்டிய 70வது கேள்வியில் கேட்கப்பட்ட ‘ஏ’ கேள்வி, பாடத்திற்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. அல்லது ‘பி’ என்று வரும் கேள்வியும் கடினமாக உள்ளது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் நேற்று கணக்கு தேர்வை சரியாக எழுதவில்லை. இதையடுத்து, கணக்கு கேள்வித்தாள் தயாரித்த ஆசிரியர் குழுவினருடன் அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி இன்று அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் அச்சுப் பிழை ஏற்பட்டுள்ள 51வது கேள்விக்கு அதே மதிப்பெண் வழங்குவது என்றும், குழப்பமாக அமைந்த கேள்விகளுக்கு விடை எழுதியுள்ள மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. |
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 23ல் துவங்குகிறது.
பாடவாரியாக விடைத்தாள்களுக்கு "டம்மி" எண் வழங்கும் பணி நடந்து வருகிறது. பிளஸ் 2 தமிழ், ஆங்கிலம் விடைத்தாள்கள் திருத்தும் பணி அந்தந்த மாவட்ட மையங்களில் மார்ச் 23ல் துவங்க உள்ளது. இதில் முதன்மை தேர்வாளர்கள் கலந்து கொள்வர்.
மார்ச் 24 முதல் உதவி தேர்வாளர்கள் மூலம் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கவுள்ளன. இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் விடைத்தாள்களுக்கு "டம்மி" எண் வழங்கும் பணி மூன்று மண்டலங்களில் நேற்று முதல் துவங்கியது. இப்பணிக்கு பின், விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்கி ஏப். 20ல் முடிவடையும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.