ஆசிரியர்கள் டியூசன் எடுப்பதற்கு தடை - 19-03-2011 |
பள்ளியில் முறையாக கற்பிக்காமல் டியூசன் எடுக்க நினைக்கும் ஆசிரியர்களின் செயலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. |
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.மேலும் உடற்கல்வி ஆசிரியர்கள் விளையாட்டு நிறுவனங்களிடம் அன்பளிப்புகளை பெறவும், புத்தக பதிப்பாசிரியர்களிடம் ஆசிரியர்கள் அன்பளிப்பு மற்றும் பரிசுகள் பெறவும் அகில இந்திய ஆசிரியர் கல்வி கவுன்சில் தடை விதித்துள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்க மாவட்ட, மாநில, தேசிய அளவில் குழு அமைக்கப்படவுள்ளது. பள்ளி நேரம் போக காலை, மாலையில் ஆசிரியர்கள் டியூசன் நடத்துவதால் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது என அகில இந்திய கல்வி கவுன்சிலுக்கு புகார்கள் சென்றன. இக்கவுன்சிலின் முன்னாள் இயக்குனர் ஆர்.கே.சர்மா தலைமையில் அமைக்கப்பட்ட குழு, ஆசிரியர்களின் ஒழுக்க விதிகள் குறித்து ஆய்வு நடத்தியது. முடிவில் இக்குழு தேசிய கல்வி கவுன்சிலிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், "மாணவர்கள் படிக்காவிட்டாலும், ஆசிரியர்கள் தங்களை தண்டிக்க கூடாது என்பதற்காக அவரிடம் சில மாணவர்கள் டியூசனுக்கு செல்கின்றனர். அதிக மதிப்பெண் பெறுவதற்காக டியூசனுக்கு செல்கின்றனர். மாதம்தோறும் ஆசிரியர்கள் கட்டணம் வசூலிக்கின்றனர். இதை முறைகேடாக கருத வேண்டியுள்ளது. காலை, மாலையில் ஆசிரியர்கள் டியூசன்கள் எடுப்பதால், பள்ளிகளில் தொடர்ந்து அவர்கள் சுறுசுறுப்பாக பணியாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. பள்ளிகளில் கல்வி கற்பிப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பள்ளியில் தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்காக வெளியிடங்களில் டியூசன் நடத்துவதானது ஆசிரியர் பணி ஒழுங்கு விதிகளுக்கு எதிரானது. எனவே, பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்க தடை விதிக்க வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள் விளையாட்டு நிறுவனங்களிடம் அன்பளிப்போ, பரிசுகளோ பெறக்கூடாது. பிற ஆசிரியர்கள், புத்தக பதிப்பாளர்களிடம் அன்பளிப்போ, பரிசுகளையோ பெற்றுக்கொண்டு, அந்த பதிப்பாளரின் புத்தகத்தை மாணவர்கள் வாங்குவதற்கு பரிந்துரை செய்வது சட்ட விரோதம். இதுபோன்ற செயல்களை ஆசிரியர்கள் செய்ய தடை விதிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அனைத்து மாநில, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி அவர்களது கருத்துக்களை தெரிவிக்கும்படி தேசிய கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது. தடை உத்தரவை மீறும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேசிய, மாநில, மாவட்ட அளவில் கல்வியாளர்கள் கமிட்டி அமைக்க வேண்டும். இந்த கமிட்டி, புகார்கள் குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும். மாவட்ட கமிட்டி பிறப்பிக்கும் உத்தரவை எதிர்த்து, மாநில கமிட்டியிடம் மேல் முறையீடு செய்யலாம். மாவட்ட கமிட்டி தலைவராக கலெக்டர், மாநில கமிட்டி தலைவராக பள்ளி கல்வி இயக்குனர் செயல்படுவர். விதிமுறைகளை மீறி டியூசன் எடுக்கும் ஆசிரியர்களை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய பரிந்துரைக்கும் அதிகாரம் கல்வியாளர்கள் கமிட்டிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் டியூசன் நடத்தும் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். பறக்கும் படையா - பறக்காத படையா? - 19-03-2011 ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் பறந்து சென்று கண்காணிக்க வேண்டிய பறக்கும் படை குழுவினரை, பறக்காத படைகளாக மாற்றியதால், குழுவில் இடம்பெற்ற ஆசிரியர்கள் புலம்பித் தவித்து வருகின்றனர். பிளஸ் 2 தேர்வுகளை கண்காணிக்க, 4,000 உறுப்பினர்களைக் கொண்டு பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படை என்றாலே, ஒரே தேர்வு மையத்தில் இருக்காமல் வெவ்வேறு தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வுப் பணிகளை கண்காணிப்பர். தற்போது நடந்துவரும் பிளஸ் 2 தேர்வில், சென்னையில் வித்தியாசமான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி நாகராஜ முருகன், சென்னையில் உள்ள பறக்கும் படைகளை பறக்காத படைகளாக மாற்றியுள்ளார். பறக்கும் படை குழுவினரை ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் தேர்வு முடியும் வரை அங்கேயே இருந்து கண்காணிக்க வேண்டும் என சி.இ.ஓ. உத்தரவிட்டுள்ளார். இதனால் பல்வேறு தேர்வு மையங்களுக்குச் சென்று பரபரப்பாக தேர்வுப் பணிகளை கண்காணிக்க வேண்டிய பறக்கும் படை குழுவினர் ஒரே பள்ளியில் தேர்வு துவங்கியது முதல், முடியும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இது குறித்து பறக்கும் படையில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் கூறியதாவது, "ஒரு சில தேர்வு மையங்களில் இரண்டு தேர்வு அறைகள்தான் இருக்கின்றன. இதுபோன்ற மையங்களில் காலை முதல், தேர்வு முடிந்து, விடைத்தாள்களை கட்டி சீல் வைப்பது வரை, நாங்கள் ஒரே பள்ளியில், செக்யூரிட்டி போல் வேலைசெய்ய வேண்டியுள்ளது. மேலும், இருக்கின்ற இரு அறைகளுக்கு பலமுறை நாங்கள் அணிவகுப்பு செய்வதால், மாணவர்கள் பீதி அடைகின்றனர். பறக்கும் படை குழுக்களின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் தற்போதைய செயல்பாடுகள் இருக்கின்றன" என்று தெரிவித்தனர். அரசு அலுவலர்களில் கோரிக்கைகளை கலையவும், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கோரிக்கைளை களைய ஆணையம் அமைக்கப்படும். அரசு பணிகளில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 3 மாதங்களிலிருந்து 4 மாதமாக உயர்த்தப்படும். அரசு பணிகளில் உள்ள பெண்களுக்கு ஓய்வரை அமைக்கப்படும். தொடக்க பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாகவும், நடுநிலை பள்ளிகளாகவும், நடுநிலை பள்ளிகள் மேல் நிலை பள்ளிகளாகவும் மாற்றப்படும். மாணவர்களுக்கு 3 சீருடைகள் இலவசமாக வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் பல்கலை., அமைக்கப்படும். பல்கலைகழகங்களில் பிரெஞ்ச், ஜெர்மன், அராபி கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பொறியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களே இல்லாத நிலை உருவாக்குவோம். அரசு கல்லூரிகளில் ஆதி திராவிட மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். அனைத்து பல்கலைகழகங்களில் ஆராய்ச்சி படிப்புகளுக்கு இடஒதுக்கீடு முறை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும். |
.
சனி, 19 மார்ச், 2011
Facebook Comments
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.