வினாத்தாள் எண்ணிக்கை குளறுபடியால் தேர்வு தாமதம் - 22-03-2011
விருதுநகர் மாவட்டம் வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியில், வினாத்தாள் எண்ணிக்கை குறைவாக வந்ததால் பிளஸ் 2 மாணவர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தேர்வு எழுதினர்.
தமிழகத்தில் பிளஸ் 2 உயிரியல் மற்றும் தாவரவியல் தேர்வுகள் நேற்று நடந்தன. வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள 146 மாணவர்களில் 53 மாணவர்கள் தாவரவியல் தேர்வும், 27 மாணவர்கள் உயிரியல் தேர்வும் எழுத அறையில் தயாராக அமர்ந்திருந்தனர். இதில் தாவரவியல் தேர்விற்குரிய வினாத்தாள் கட்டுகளை பிரித்தபோது, அதில் 49 மட்டுமே இருந்தன. இதைக் கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே, அருகிலுள்ள நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விரைந்தனர். அங்கிருந்து வினாத்தாள் வாங்கி வந்து தேர்வை நடத்தினர். இதனால் 10 மணிக்கு துவங்க வேண்டிய தேர்வு, 11 மணிக்கு துவங்கி மதியம் 2 மணிக்கு முடிந்தது. இருப்பினும் தேர்வு துவங்க தாமதமானதால் மாணவர்கள் பதட்டமடைந்தனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, "சென்னையில் இருந்து அனுப்பப்படும் வினாத்தாள் கட்டுகளை தேர்வு நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்புதான் பிரிப்போம். அப்போதுதான் எண்ணிக்கை பற்றி தெரியும். ஆனால் வினாத்தாள்களை எண்ணி சரிபார்த்து அனுப்பாததால் இந்த தவறு நடந்துள்ளது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை" என்றார்.
உயிரியல் வினாத்தாள் கடினம் - 22-03-2011
பிளஸ் 2 உயிரியலில் கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக ஆசிரியர்கள், மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டதாவது, "விலங்கியலில் ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிமை. இதில் 10 மதிப்பெண் வினாக்கள் முந்தைய தேர்வுதாளில் இருந்தவை. இதனால் சற்று கடினமாக இருந்தது. புத்தகம், புளூ பிரின்ட் படி கேள்விகள் கேட்கவில்லை. பழைய தேர்வு வினாக்களை படித்தவர்கள் அதிக மதிப்பெண் பெறலாம். தாவரவியலில் 3 மதிப்பெண் கேள்விகள் எளிமை. விலங்கியலில் 10 மதிப்பெண் வினாக்கள் கடினம். புத்தகம், புளூபிரிண்ட் படி கேள்விகள் கேட்டிருந்தாலும், சற்று ஆழமாக இருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்களும் புளூபிரின்ட் படி கேட்கவில்லை.
ஆசிரியர் தரப்பில் கூறப்பட்டதாவது, "ஐந்து மதிப்பெண் வினாக்கள் புளூ பிரின்ட் படி இல்லை. கடந்த ஆண்டில் சற்று கடினம். அதோடு ஒப்பிடுகையில் தற்போது எளிமைதான். ஐந்து மதிப்பெண் வினாக்களை நேரடியாக கேட்காமல், மறைமுகமாக கேட்டுள்ளனர். மாணவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. விலங்கியலில் எதிர்பாராத கேள்விகள் சில கேட்கப்பட்டன.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.