தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?
மத்திய அரசு ஊழியர்களுக்கு, 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு, தற்போது, 45 சதவீத அகவிலைப்படி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், அதிகரித்து வரும் பணவீக்கம், விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை, 6 சதவீதம் உயர்த்துவதற்கு, நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அகவிலைப்படி உயர்வுக்கு, நுகர்வோர் விலை குறியீட்டெண்ணை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டு தோறும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை, அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். இந்த வகையில், 6 சதவீத உயர்வு, கடந்த ஜனவரி முதல் தேதியிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதன் மூலம், ஆண்டொன்றுக்கு அரசுக்கு, 5,716 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். ஜனவரி முதல், மார்ச் வரையிலான மூன்று மாத காலத்திற்கு வழங்கப்படும் அகவிலைப்படியை சேர்த்து, அடுத்தாண்டு, அரசுக்கு, 6,668 கோடியே 52 லட்சம் கூடுதலாக செலவாகும். இதன் மூலம், 50 லட்சம் அரசு ஊழியர்களும், 38 லட்சம் பென்ஷன்தாரர்களும் பயன்பெறுவர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும், அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இம்முறை தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதால், சிறிது காலம் தள்ளிப்போகும்.
எல்லோருக்கும் பொதுவான அறிவியல், கணிதப் பாடம் - 24-03-2011
இந்தியா முழுவதும் அனைத்து மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான அறிவியல், கணிதப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் மேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்படும் பாடப் பிரிவுகள் அரசு பள்ளி, மெட்ரிக் என மொத்தம் 32 வகையாக உள்ளன. அதில் தற்போது 19 பாடப் பிரிவுகளில் மட்டும் புதிய பாடப்புத்தகத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவை அனைத்திலும் வரும் கல்வி ஆண்டு முதல் ஒரே மாதிரியான அறிவியல், கணிதப் பாடங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமும் பள்ளி கல்வி மையமும் சேர்ந்து தயாரித்துள்ளது.
வரும் கல்வி ஆண்டில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும்.இந்த பாடங்களைப் படிக்கும் மாணவர்கள் 2013ஆம் ஆண்டில் பொதுத் தேர்வை எழுதுவார்கள்.
சி.பி.எஸ்.இ. நிர்வாகம், தனது அனைத்து பள்ளிகளுக்கும், புதிய பாடப் புத்தகம் பற்றிய தகவல்களை அனுப்பிவிட்டது. மேலும், புதிய பாடங்களை தனது இணையதளத்தில் வெளியிட்டு, புத்தகங்கள் அச்சடிக்கும் பணியிலும் இறங்கியுள்ளது.மற்ற பள்ளிகளும், புதிய பாட முறை மாற்றத்தை மாணவர்களுக்கு அறிவித்துள்ளது.பிளஸ் 2 படித்து முடித்து பல்வேறு உயர் கல்விகளில் சேர நினைக்கும் மாணவர்களுக்கு இந்த புதிய பாட முறை மிகுந்த பயனளிக்கும் என்று புதிய பாட முறையை வடிவமைத்த மைய உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.