6-வது ஊதியக்குழு சம்பள உயர்வு: அரசு ஊழியர்கள் நிலுவைத்தொகை தேர்தலுக்கு பிறகே கிடைக்கும்
சென்னை, மார்ச்.7-
6-வது ஊதியக்குழுவின் அறிக்கைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 2006-ம் ஆண்டு சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. அந்த பரிந்துரைகளை தமிழக அரசு பெற்று, அதை ஆய்வு செய்வதற்கு தனிக்குழு அமைத்தது. அதன் அறிக்கைப்படி 1.6.2009 முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுத்தது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.1.2007 முதல் 6-வது ஊதிய கமிஷன் பரிந்துரைப்படி சம்பளம் வழங்க முடிவு செய்தது. அந்த தேதியில் இருந்து 31.5.2009 ஆம் தேதி வரை உள்ள காலத்துக்கான நிலுவைத் தொகையையும் 3 தவணைகளாக வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
2009-ம் ஆண்டு முதல் தவணையும், 2010-ம் ஆண்டு 2-வது தவணையும் வழங்கப்பட்டது. 3-வது தவணை 2011 ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. ஆனால் மார்ச் 1-ந்தேதியே தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை நெறிமுறை அமலுக்கு வந்துவிட்டது. எனவே தமிழக அரசு ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை பெறுவதற்கான அனுமதி பெறுவதற்கான பைல்களை தமிழக அரசின் நிதித்துறை தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியது.
ஆனால் இந்திய தலைமை தேர்தல் அதிகாரியின் அனுமதி தேவை என்று கூறி அந்த பைல் திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. எனவே, ஓட்டுப்பதிவு ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகே தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள நிலுவைத் தொகை கிடைக்கும் என்று தெரிகிறது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.