!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 16 ஏப்ரல், 2011



பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதமாகலாம் - 17-04-2011
சட்டசபை தேர்தல் முடிவு காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை குறித்த தேதியில் வெளியிட முடியாத சிக்கல் எழுந்துள்ளது.
தேர்தல் முடிவு தேதியையொட்டி, தேர்வு முடிவும் தயாராகும் என்பதாலும், தேர்தல் முடிவுக்குப்பின் புதிய அரசு பதவியேற்கும் வைபவம் நடைபெறும் என்பதாலும், தேர்வு முடிவுகள் வெளியாவது கடந்த ஆண்டை விட நான்கு நாள் வரை தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகளை முன்கூட்டி வெளியிடவும் வழியில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 2ம் தேதி முதல் 25ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. 7 லட்சத்து 23 ஆயிரத்து 545 மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். 43 மையங்களில் நடந்துவந்த விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை.
பெரும்பாலான மையங்களில் பணிகள் முடிந்து விட்டாலும், சில மையங்களில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிப்பாட விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடியவில்லை. இப்பணிகள் வரும் 20ம் தேதியுடன் முடிகின்றன. வழக்கமாக மே இரண்டாவது வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும். கடந்த ஆண்டு மே 14ம் தேதி தேர்வு முடிவு வெளியானது.
இந்த ஆண்டும் இதே தேதியிலோ அல்லது ஒரு சில தினங்கள் முன்னதாகவோ வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி வெளியாகிறது. இந்த தேதிக்குள், தேர்வு முடிவுகளை வெளியிட கண்டிப்பாக வாய்ப்பு இல்லை என தேர்வுத்துறை வட்டாரங்களும், "டேட்டா சென்டர்" வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. ஏனெனில் விடைத்தாள் திருத்தும் மையங்களில் பெறப்படும் மதிப்பெண் விவரங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து, தேர்வுத்துறை ஒப்புதல் அளித்த பிறகே, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள "டேட்டா சென்டரில்" ஒவ்வொரு மாணவருக்கும் மதிப்பெண்கள் பதியும் பணி துவங்கும். ஏழு லட்சம் மாணவர்களுக்கும் மதிப்பெண்களை பதிவுசெய்து, சரிபார்த்து, "ரிசல்ட்" தயாரிக்க 20 நாட்களுக்கு மேல் தேவைப்படும்.
முன்கூட்டியே தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவசரம் அவசரமாக செயல்பட்டால் பல்வேறு குழப்பங்கள் நேரிடும் என்பதை தேர்வுத்துறையும், "டேட்டா சென்டரும்" உணர்ந்துள்ளன. எனவே, கடந்த ஆண்டைவிட முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு இல்லை. 13ம் தேதிக்குப்பின் தேர்வு முடிவுகள் தயாரானாலும், உடனடியாக முடிவை வெளியிட முடியாது. ஏனெனில், 14ம் தேதி முதல், புதிய அரசு அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடக்கும்.
எனவே, இதுபோன்ற நேரத்திலும் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், தேர்வு முடிவுகளில் எதிர்பாராதவிதமாக தேர்ச்சி சதவீதம் குறைந்திருந்தால், அதுகுறித்து அரசிடம் ஆலோசிக்க வேண்டிய கட்டாயம் தேர்வுத்துறைக்கு ஏற்படும். உண்மையான தேர்ச்சி சதவீதம் தெரிந்ததும், அது சராசரி அளவில் இருந்தால் பிரச்னை இருக்காது.
ஆனால் 5 சதவீதம் அளவிற்கு சரிந்தாலும் அதனால் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன், அரசியல்ரீதியாக பல்வேறு விமர்சனங்களை தற்போதைய அரசு எதிர்கொள்ள நேரிடும். ஒரு மதிப்பெண் முதல் ஐந்து மதிப்பெண்கள் வரை தோல்வியடையும் நிலையில் உள்ள மாணவர்களை கடைசி நேரத்தில் அரசு கரையேற்றி விடுவது ஒவ்வொரு ஆட்சியிலும் நடந்து வருகிறது. எனவே, இதுபோன்ற சிக்கல்கள் எல்லாம் இருப்பதால் புதிய அரசு அமைந்தபின், பள்ளிக் கல்வித்துறைக்கு பொறுப்பேற்கும் அமைச்சரிடம் ஆலோசனை பெற்ற பிறகே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் பணம் குறைத்து வழங்கியதால் ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
  

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தேர்தல் கமிஷன் சார்பில் மதிப்பூதியம் வழங்கப்படும். இதில் ஓட்டு சாவடி அலுவலருக்கு ரூ.1,450ம், பி.1, 2,3 என மூன்று நிலையில் பணியாற்றிய அலுவலர்களுக்கு ரூ.1,075 ம் தேர்தல் கமிஷன் வழங்கியது. மூன்று கட்ட பயிற்சி வகுப்புகளுக்கு ஒரு வகுப்புக்கு ரூ.250 வீதமும், தேர்தலுக்கு முதல் நாள் ஓட்டு சாவடிக்கு செல்வதால் ரூ.250 ம், சாப்பாட்டுக்கு 100, ஓட்டுப்பதிவு நாளில் ரூ.350 ம் வழங்க வேண்டும். பி.1, பி.2, பி.3, அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சியில் ஒரு வகுப்புக்கு ரூ.175 ம், ஓட்டு சாவடிக்கு முதல் நாள் செல்லும் போது ரூ.175 ம், சாப்பாட்டுக்கு 100 அதே போல் ஓட்டுப்பதிவு நாளில் ரூ.275 ம் மதிப்பூதியம் அனுமதிக்கப்பட்டது.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டு சாவடி அலுவலர்கள், பி.1, நிலை அலுவலர்களுக்கு இரண்டு கட்ட முழு நாள் பயிற்சி வழங்கப்பட்டது. பி.2, பி.3, ஆகியோருக்கு அரைநாள் பயிற்சி மட்டுமே வழங்கப்பட்டது. மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பில் பணி நியமன உத்தரவு மட்டும் வழங்கப்பட்டது. இதில் ஒரு சில மாவட்டங்களில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு மதிய சாப்பாடாக லெமன், தயிர் சாத பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதற்காக ஓட்டு சாவடி அலுவலர்களுக்கு ரூ.1,250 ம், பி.1,பி.2, பி.3, நிலை அலுவலர்களுக்கு ரூ.900 மட்டுமே வழங்கப்பட்டது.

இதில் மதிய உணவுக்காக பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு சில மாவட்டத்தில் ஆயிரம் பணியாளர்கள் தேவை எனில் கூடுதலாக 200 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டு கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தேர்தல் நாளில் பணி வழங்கப்படாததால் மதிப்பூதியம் வழங்கப்படவில்லை. தேர்தல் கமிஷன் வழங்கிய மதிப்பூதியத்தில் பல இடங்களில் குறைத்து வழங்கப்பட்டதால் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png