சம்சீர்கல்வி கல்வித்தரம் உயர்த்தும்படியாக இல்லை:
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:
நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் சமச்சீர் கல்வி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் படியாக அமையவில்லை. தற்போதைய சமச்சீர் கல்வித்திட்டம் ஒட்டுமொத்த கல்வித்தரத்தை உயர்த்த வழி செய்யாது . எனவே சமச்சீர் கல்வி வேண்டும் என்றும் ஆனால் அதே நேரத்தில் எவ்வாறு கல்வித்தரத்தை உயர்த்துவது என்பது குறித்து ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்படுகிறது. நடப்பாண்டு சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பது என்றும் , இந்த கல்வி ஆண்டில் பழைய பாடத்திட்டங்களையே பின்பற்றலாம் என்றும், புத்தகம் அச்சிட கால அவகாசம் தேவைப்படுவதால் ஜூன் 1 ம் தேதி முதல் துவங்கவிருந்த பள்ளியை வரும் 15 ம் தேதி திறக்கலாம் என்றும் உத்தரவிடப்படுகிறது.
ஆசிரியர் இடமாறுதலுக்கான கவுன்சிலிங், மே 25ல் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
ஆண்டுதோறும், மே இறுதியில், ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கவுன்சிலிங் நடத்தப்பட்டு வந்தது. நடப்பு ஆண்டில், மாவட்டத்திற்குள் இடமாறுதல், மாவட்டம் விட்டு இடமாறுதலுக்கு விருப்பமுள்ளவர்கள், மே 12க்குள் விண்ணப்பிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு, மே 25ல் கவுன்சிலிங் துவங்க வேண்டும்.
அப்போதுதான், பள்ளிகள் துவங்கும்போது இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், பணியில் சேர வசதியாக இருக்கும். புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இதுவரை கவுன்சிலிங்கிற்கான உத்தரவு வரவில்லை. எனவே, திட்டமிட்டபடி மே 25ல் கவுன்சிலிங் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மே 25 முதல் கவுன்சிலிங் துவங்க வேண்டும். ஆனால், இதுவரை உத்தரவு வரவில்லை. எனவே, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடப்பதில் தாமதம் ஏற்படும் என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.