!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 24 மே, 2011


புதிய பாடப் புத்தகங்கள் அச்சிட மூன்று மாதம் கெடு

சமச்சீர் கல்வித்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அடுத்து, பழைய பாடத் திட்டத்துக்கான புதிய புத்தகங்கள் அச்சிடும் பணிகள், மூன்று மாதங்களில் முடிக்கப்படும். இதற்கான குறுகியகால, டெண்டர் கோரும் பணிகள் துவங்கியுள்ளன என, தமிழ்நாடு பாடநூல் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல் மற்றும் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., ஆகிய பாடத்திட்டங்கள் இருந்தன. இதில், சி.பி.எஸ்.இ., தவிர மற்ற அனைத்து போர்டுகளையும் இணைத்து, சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதை அமல்படுத்த, புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு, பொதுப்பள்ளி வாரியம் ஏற்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நிபுணர் குழு அமைக்கப்பட்டு, சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
கடந்தாண்டு, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு, 10ம் வகுப்பு வரை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, ஏழு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் முடிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், சமச்சீர் கல்வி திட்டத்தில் உருவாக்கப்பட்ட பாடத் திட்டங்கள், ஒட்டுமொத்த கல்வித்தரத்தை உயர்த்துவதாக இல்லை என்பதால், இந்த பாடத்திட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைப்பது என தமிழக அரசு முடிவெடுத்தது. கல்வித்தரத்தை உயர்த்துவது குறித்து ஆராய, வல்லுனர் குழு அமைப்பது என்றும், இந்த கல்வியாண்டில், பழைய பாடத் திட்டத்தையே பின்பற்றலாம் என்றும் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, பழைய பாடத் திட்டத்துக்கான புதிய புத்தகங்களை அச்சடிக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு, தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்காக, குறுகியகால, டெண்டரை தமிழ்நாடு பாடநூல் கழகம் கோரியுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது.


8.57 லட்சம் மாணவர்கள் பரிதவிப்பு எஸ்எஸ்எல்சி ரிசல்ட் எப்போது?

சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் தவிப்பில் உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிக்குலேஷன் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தன. மெட்ரிக்குலேஷன் தேர்வுகள் மார்ச் 22ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28ம் தேதியும் தொடங்கி ஏப்ரல் 11ல் முடிந்தன. மொத்தம் 6,922 பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 57 ஆயிரத்து 956 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.

விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கி, மே 6ம் தேதி வரை நடந்தது. தற்போது மதிபெண் பட்டியல் தயாரிக்கும் பணியும் முடியும் நிலையில் உள்ளது. ஆண்டுதோறும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மே 10 முதல் 15ம் தேதிக்குள் வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு மே 9ம் தேதியே வெளியிட்டுவிட்டனர். பத்தாம் வகுப்பை பொறுத்தவரை மே 20ம் தேதிக்குள் முடிவு வெளியிடப்பட்டு விடும். இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. ரிசல்ட் எப்போது வருமோ என மாணவர்கள் பரிதவித்தபடி உள்ளனர்.
 

தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை முடிக்க மே 24ம் தேதி வரை கெடு வைக்கப்பட்டு இருந்தது. தேர்வுத் துறையில் போதிய ஆள் பற்றாக்குறை காரணமாக தேர்வு முடிவு வெளியாவது தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. வரும் 27 அல்லது 30ம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png