எஸ்ஸி-எஸ்டி நலப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு
சென்னை, ஜூன் 17: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தேதி விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011- 2012 ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல்களுக்கான கலந்தாய்வு முறையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் / உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள், சென்னை -5 ஆதிதிராவிடர் நல ஆணையரக கூட்ட அரங்கில் கீழ்க்காணும் அட்டவனை நிரல் படி நடைபெறவுள்ளது.
1. இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் - ஜூன் 23 - காலை 10 மணி முதல் 1.30 வரை
2. பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் - ஜூன் 23 - காலை 11.30 முதல் 1 மணி வரை
3. மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் - ஜூன் 23 - மதியம் 2 மணி முதல் 3.30 வரை
4. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் - ஜூன் 23 - பிற்பகல் 3.30 முதல் மாலை 5 மணி வரை
5. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் (பாடம் வாரியாக) - ஜூன் 24 - காலை 10 - மாலை 5 மணி வரை
தமிழ், ஆங்கிலம், கணிதம் - ஜூன் 24 - காலை 10 - 11 மணி
இயற்பியல், வேதியியல் - ஜூன் 24 - காலை 11 முதல் 12 மணி வரை
உயிரியல், தாவரவியல், விலங்கியல் - ஜூன் 24 - 12 மணி முதல் 1 மணி வரை
இதர பாடங்கள் - ஜூன் 24 - பிற்பகல் 2 மணி முதல்...
சமச்சீர் கல்வி ஆய்வுக்கான நிபுணர் குழு அமைப்பு-17-06-2011
சென்னை: சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சமச்சீர் கல்வி குறித்துஆராய தலைமை செயலாளர் தலைமையில் ஒன்பது பேர் கொண்டகுழுவை அமைத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவுபிறப்பித்துள்ளார்.
இதன்படி தலைமைச்செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் மத்திய இடைக்கல்வி வாரியமுன்னாள் இயக்குனர் ஜி.பாலசுப்பிரமணியன், லேடி ஆண்டாள் மெட்ரிக்பள்ளியின் முன்னாள் முதல்வர்விஜயலட்சுமி ஸ்ரீனிவாசன், விஏவி பள்ளி குழுமத்தின் நிறுவனர் மற்றும் ஜெயதேவ், பத்மசேஷாத்ரிபள்ளியின் முன்னாள் இயக்குனர் பார்த்தசாரதி, டில்லி தேசிய கல்வி அறிவியல் மறறும் கணிதவியல் துறைபேராசிரியர் திரிபாதி, சமூக அறிவியல் துறை பேராசிரியர் அனில் சேத்தி, பள்ளி கல்வித்துறை செயலாளர்சபீதா மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வசுந்தராதேவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.