!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 28 ஜூன், 2011

சமச்சீர் கல்வி விவகாரம்: விரைவில் அறிக்கை தாக்கல்


சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து ஆராய, தலைமைச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, இந்த வார இறுதிக்குள், சென்னை ஐகோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

நிபுணர் குழு, தலைமைச் செயலகத்தில் பல சுற்று ஆய்வுக் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளது. மாநில பாடத்திட்டம், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் உள்ளிட்டவற்றையும், முந்தைய அரசு உருவாக்கிய சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தையும் விரிவாக ஆய்வு செய்துள்ளது. இதையடுத்து, அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஓரிரு நாளில், நிபுணர் குழுவின் இறுதிக்கட்ட கூட்டம் நடக்கிறது. அதில், அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் இறுதி செய்யப்படுகின்றன. அதன்பின், இந்த வாரம் வெள்ளிக்கிழமைக்குள், சென்னை ஐகோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்ய, நிபுணர் குழு திட்டமிட்டுள்ளதாக, அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முந்தைய தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறி, அ.தி.மு.க., அரசு நிறுத்தி வைத்து நடவடிக்கை எடுத்தது.

இது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து, சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில், தமிழக அரசின் சட்டத் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்த வழக்கில், கடந்த 15ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, கடந்த 17ம் தேதி, தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி தலைமையில், எட்டு பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இக்குழு, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை ஆய்வு செய்து, ஜூலை 6ம் தேதிக்குள், சென்னை ஐகோர்ட்டில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று, முதல்வர் தெரிவித்திருந்தார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png