!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 29 ஜூன், 2011

அரசு ஊழியர்களுடன் நல்லுறவு: வதந்திகளை நம்பாதிருக்க யோசனை



அரசு ஊழியர்களுடன் நல்லுறவு: வதந்திகளை நம்பாதிருக்க யோசனை

அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிய உயரதிகாரிகள், இந்த ஆட்சி, அரசு ஊழியர்களுக்கு எதிரானது அல்ல என்றும், வதந்திகளை நம்பவேண்டாமென்றும் உத்தரவாதம் அளித்தனர்.

அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகளை, தமிழக அரசின் பொதுத் துறை செயலர், பணியாளர் நலத்துறை செயலர் அழைத்துப் பேசினர். இதில், தலைமைச் செயலக சங்கம், "சி அண்டு டி' பிரிவு ஊழியர்கள் சங்கம், என்.ஜி.., சங்கம் உட்பட முக்கிய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, "அரசு ஊழியர்களுக்கு எதிரான அரசு என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால், இந்த அரசு, ஊழியர்களுடன் நல்லுறவையே விரும்புகிறது' என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும், "முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், ஈட்டு விடுப்பு எண்ணிக்கையை குறைக்க உள்ளதாகவும். சனிக்கிழமைகளை பணி நாளாக அறிவிக்க இருப்பதாகவும் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றை நம்ப வேண்டாம். எவ்வித எதிரான நடவடிக்கையை எடுக்கும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசின் இந்த கருத்தை தங்களது சங்கத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர். அரசு ஊழியர்கள் நன்றாக செயல்பட்டால் தான், திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்றும், அரசு ஊழியர்கள், இந்த அரசுக்கு நல்ல பெயர் பெற்றுத் தர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். அரசு ஊழியர்களது நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும், கோரிக்கைகள் பற்றி இன்னொரு நாளில் பேசலாம் என்றும், சலுகைகள் குறித்து பட்ஜெட் சமயத்தில் முதல்வர் முடிவெடுப்பார் என்றும் கூறினர். ஊழியர் சங்க நிர்வாகிகளும், தங்களுக்கு இந்த அரசு மீது எவ்வித கசப்புணர்வும் இல்லை என்றும், அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்றும் உறுதியளித்தனர்.


:கூடுதல் கல்வி தகுதிக்காக ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை பிடித்தம் செய்தது தவறு என மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.
நெல்லை கீழப்பாவூரை சேர்ந்த ஆசிரியர் சுப்ரமணியன் தாக்கல் செய்த ரிட் மனு: நான் 1997ல் எம்.எட்., 1999ல் எம்.ஏ., முடித்தேன். என் கூடுதல் கல்வி தகுதிக்காக ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 2004ல் தணிக்கையின் போது, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது தவறு என தெரிவிக்கப்பட்டது. மேலும் 1997 முதல் 2000 ம் வரை வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை பிடித்தம் செய்ய கல்வி துறையினர் உத்தரவிட்டனர். அதை ரத்து செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன், ""போலி ஆவணங்கள், பொய் தகவல்களை தெரிவித்து ஊக்கத்தொகை பெற்றால், அதை ரத்து செய்யலாம். கூடுதல் கல்வி தகுதிக்காக வழங்கப்பட்ட ஊக்கத்தொகை, ஆசிரியர்களது கல்வி தகுதியை மேலும் அதிகரிக்க செய்யும். மனுதாரர் சம்பளத்தில் பிடித்தம் செய்ய கல்வி துறையினர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,'' என்றார்.





தமிழக அரசின் அனைத்து துறைகளிலும், மத்திய அரசை பின்பற்றி நிர்வாக முறையில், மக்களை மையமாக கொண்ட சேவை நோக்கில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

மத்திய அரசின் இரண்டாவது நிர்வாக சீர்திருத்த கமிஷன், அமைச்சர் வீரப்ப மொய்லி தலைமையில் அமைக்கப்பட்டு, "மக்களை மையப்படுத்திய நிர்வாகம்- அரசு செயல்பாட்டின் இதயம்' என்ற தலைப்பில், தன், 12வது அறிக்கையை தாக்கல் செய்தது. இவற்றை, அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் அமல்படுத்த உத்தரவிட்டது. மாநில அரசு அலுவலகங்களிலும் அமல்படுத்த, பரிசீலிக்குமாறு தெரிவித்திருந்தது. இதன்படி, தமிழக அரசின் முந்தைய நிர்வாக சீர்திருத்த கமிஷனர் தங்கம் சங்கரநாராயணன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு, இந்த பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், "செவ்வோட்டம்' எனப்படும், சிறந்த சேவை முறையை, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சேவைகளை விவரித்து, வாடிக்கையாளர்களை அடையாளம் காணுதல், ஒவ்வொரு சேவைக்கும் தரம் மற்றும் நடைமுறைகளை நிர்ணயித்தல், அந்த தரத்தை எதிர்கொள்ளும் திறனை வளர்த்தல், தரத்தை அடைவதற்கு செயல்படுதல், அந்த செயல்பாட்டை கண்காணித்தல், சுதந்திரமான அமைப்பைக் கொண்டு அதன் தாக்கத்தை மதிப்பீடு செய்தல், அதன் வளர்ச்சியை தொடரச் செய்தல் ஆகிய ஏழு நடைமுறைகளை, தினசரி நிர்வாகத்தில் புகுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறைதீர்க்கும் முறையில் மாற்றங்கள் கொண்டு வர, ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒரு குறைதீர்ப்பு அதிகாரியை நியமித்தல், துறைகள் அல்லது கலெக்டருக்கு வரும் புகார்களை ஆய்வு செய்து, எங்கெல்லாம் தலையீடு தேவை என்பதை கண்டறிந்து, அவற்றை செயல்படுத்துவதில் உள்ள இடையூறுகளை களைய வேண்டுமென, இக்குழு பரிந்துரைத்துள்ளது. அனைத்து அமைச்சர்கள், துறைகளது செயல்பாடுகளை எளிமையாக்க, வழிமுறையை ஏற்படுத்த வேண்டும். சட்டம், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் எங்கெங்கு மாற்றங்கள் தேவையோ அங்கு கொண்டு வர வேண்டும். இப்பணிகளை இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டுமென, மத்திய குழுவின் பரிந்துரையை முழுமையாக அமல்படுத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக நிர்வாக சீர்திருத்த ஆணையர் பரிந்துரைத்த அனைத்து நடைமுறைகளையும், தமிழக அரசின் நிர்வாகத்தில் செயல்படுத்த முடிவு எடுத்திருப்பதாக, பணியாளர் சீர்திருத்தத் துறை செயலர் பிறப்பித்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png