!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 5 ஜூலை, 2011

பள்ளிகள் தோறும் சிறப்பு முகாம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


பள்ளிகள் தோறும் சிறப்பு முகாம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளிகள் தோறும் மாணவர்களுக்கு யோகா, மருத்துவபரிசோதனை, பிசியோதெரபி முகாம்களை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு முகாம்களை நடத்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 8 முதல் 14 வரை யோகா கல்வி முகாம் நடத்தப்படவுள்ளது.
வேதாத்திரி மகரிஷி மனவளக்கலை மன்ற யோகா பயிற்றுனர்கள் பயிற்சியளிக்க உள்ளனர். மாணவிகளுக்கு பெண் பயிற்சியாளர்கள் மூலம் யோகா கறப்பிக்கப்படவுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், சுகாதாரத்துறை இணை இயக்குனர்களை தொடர்பு கொண்டு மருத்துவ பரிசோதனை முகாம்களை ஜூலை 19 க்குள் நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சுகாதாரம் இணை இயக்குனர், அனைவருக்கும் கல்வி இயக்க பிசியோதெரபி மருத்துவ திட்ட வல்லுனர்களை கொண்டு, பிசியோதெரபி வழங்க வேண்டிய மாணவர்களை கண்டறிந்து, ஜூலை 27 க்குள் பயிற்சி வழங்க வேண்டும்.
இதற்கான செலவுகளை பள்ளி சிறப்பு கட்டண குவிப்பு நிதியில் செலவு செய்து கொள்ளலாம். முகாம்களை நடத்தி முடித்த பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அறிக்கை வழங்க வேண்டும்" என , முதன்மை கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சமச்சீர்கல்வி அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்!
சமச்சீர் கல்வியை ஆய்வு செய்ய தலைமை செயலர் சாரங்கி தலைமையில் 9 பேர் கொண்ட கமிட்டியை தமிழக அரசு நியமித்தது. இந்தக் கமிட்டி ஆய்வு நடத்தி சமச்சீர் கல்வி புத்தகங்கள் தரம் குறித்து அறிக்கை தயாரித்தது. இந்நிலையில் கமிட்டி சார்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வசுந்தராதேவி இன்று காலை ஐகோர்ட் வந்தார். பதிவாளர் ஜெனரல் விமலாவிடம் சமச்சீர்கல்வி தரம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். பதிவாளர் ஜெனரல் விமலா அறிக்கை நகலை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பாலிடம் சமர்ப்பித்தார். 

அவர் அறிக்கையை படித்து பார்த்தார். அப்போது மனுதாரர்கள் சார்பாக வக்கீல்கள் வில்சன், பிரசாத், கே.பாலு ஆஜராகி, அறிக்கை நகல் வேண்டும் என்றனர். தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் ஆஜராகி, அறிக்கை நகலை தர தயாராக இருக்கிறோம் என்றார். இதை தொடர்ந்து அறிக்கை நகல்கள் மனுதாரர் வக்கீல்களுக்கு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் வழக்கு விசாரணை நாளை மறுதினத்துக்கு (7ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டது.

சமச்சீர் கல்வி பாடப்புத்தகம் தரமற்றது: அறிக்கையில் தகவல்!

மனுதாரின் வக்கீல் பிரசாத் கூறியதாவது: சமச்சீர் கல்வி அறிக்கையை படித்துப் பார்த்தேன். ‘சமச்சீர் கல்வி பாடப்புத்தகம் தரமற்றதுஎன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், ‘1ம் வகுப்பு பாடத்துக்கும் 2ம் வகுப்பு பாடத்துக்கும் தொடர்பு இல்லை. இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது. அவசர அவசரமாக சமச்சீர் பாடபுத்தகம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் பல குறைகள் உள்ளனஎன்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png