!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 16 ஜூலை, 2011

பழைய பாடப் புத்தகம் அச்சிடும்பணி முடிய பல மாதங்களாகும்


  தமிழக பள்ளிகளில் சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்துவது தொடர்பான வழக்கு 
கோர்ட்டில் உள்ளது. சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி புதிய நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் அறிக்கையை சென்னை ஐகோர்ட் ஆய்வு செய்து, தனது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. இதற்கிடையே பழைய பாடத்திட்ட புத்தகங்களும் அச்சிடும் பணி பல மாநிலங்களில், பல அச்சகங்களில் நடந்து வருகிறது. ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை 13 கோடி பாடப்புத்தங்கள் தேவை. இவற்றை அச்சிடுவதற்கு ஆறரை மாதங்களாவது ஆகும். இதுவரை மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புக்கான அறிவியல், தமிழ் இலக்கணம் ஆகியவையே முடிந்துள்ளன. இவை தவிர ஒவ்வொரு வகுப்புக்கும் ஏதாவது ஒரு பாடம் மட்டுமே முடிவடைந்துள்ளன
. 



மெட்ரிக் வகுப்புகளுக்கான பழைய பாடத்திட்டங்கள் அச்சிடும் பணி முடிவடைந்து மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பாடப் புத்தகங்களே இப்போது தயாராக உள்ளன. இவ்வகையில் இதுவரை 2 கோடி புத்தகங்களே அச்சிடும் பணி முடிந்துள்ளது. எனவே மீதியுள்ள புத்தகங்களையும் அச்சிட்டு வழங்க, குறைந்தது மேலும் 2 மாதங்களாவது ஆகலாம். எனவே கோர்ட் தீர்ப்பு வந்தாலும் அதை எப்படி செயல்படுத்துவது என அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்


அரசு பள்ளியை ஆட்டிப்படைக்கும் ..எஸ்., அதிகாரியின் மனைவி! ""..எஸ்., அதிகாரியின் மனைவி, ஆசிரியர்களை ஆட்டிப்படைச்சிட்டு இருக்காங்க பா...!'' என, பேச ஆரம்பித்தார் அன்வர்பாய்.
""விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

""தமிழகத்துல, எந்த துறையில இருந்தாலும் திறமையா செயல்படக் கூடியவர்னு, ஒரு மூத்த ..எஸ்., அதிகாரிக்கு நல்ல பெயர் இருக்கு பா... வட மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், தி.மு.., ஆட்சியில, முக்கியமான துறைகள்ல இருந்தார்... இந்த ஆட்சியில, "டம்மி'யான இடத்துல, "போஸ்டிங்' போட்டுட்டாங்க...

""இவரோட மனைவி, சென்னையில அரசு மேல்நிலைப் பள்ளியில முதுகலை ஆசிரியரா வேலை பார்த்துட்டு இருக்காங்க பா... கணவர் ..எஸ்., அதிகாரிங்கறதை சொல்லிச் சொல்லி, பள்ளியில வேலை பார்க்கற எல்லா ஆசிரியர்களையும் ஆட்டிப்படைச்சிட்டு இருக்காராம்... தான் சொல்றதைத்தான் ஆசிரியர்கள் கேட்கணும்னு மிரட்டறாங்களாம்... ஆசிரியர்கள் எல்லாம் புலம்பிட்டு இருக்காங்க...'' என்றார் அன்வர்பாய்.

நன்றி- தினமலர்


Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png