!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011




ஆசிரியர் பணிநியமனத்திற்கு அரசு ஒப்புதல்
மதுரை : தமிழகத்தில் கடந்தகல்வி ஆண்டின் இறுதியில் தேர்வு செய்யப்பட்டோரின் திருத்திய பட்டியலை தயார் செய்து, ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆட்சியின் இறுதியில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். வேலை வாய்ப்பு அலுவலக "சீனியாரிட்டி' பட்டியல் பெற்று, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. பணி நியமன உத்தரவு வழங்குவதற்குள் சட்டசபை தேர்தல் வந்ததால், அனைத்து செயல்பாடும் நின்று போனது. இந்நிலையில் பணி நியமனம் தொடர்பாக அரசு புதிய உத்தரவிட்டு (அரசாணை எண்: 105) உள்ளது.

அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தேர்வு வாரிய கடிதத்தில், விடுபட்டோரை அழைத்து சான்றிதழ் சரிபார்த்து மீண்டும் தேர்வானோர் பட்டியலை இணையதளம் மூலம் வெளியிட வேண்டும். தேர்வானோருக்கு ஆணைகள் அனுப்ப வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறையில் 268, மதுரை மாநகராட்சிக்கு 10 பணியிடங்களுக்கும் 2009-10ல் பரிந்துரைக்கப்பட்டோரை நிரப்ப அரசால் அனுமதிக்கப்பட்டதால், இப்பணியிடங்களையும் தேர்வு செய்ய அரசின் உத்தரவை வேண்டியுள்ளனர்.

வேலை வாய்ப்புத் துறை இயக்குனரின் 12.1.2010 மற்றும் 27.9.2010 நாளிட்ட கடிதங்களில் சிபாரிசு செய்துள்ள பதிவுமூப்பு அடிப்படையிலான பட்டியலின் செல்லுபடி காலம் 26.9.2011 வரை உள்ளதால், அப்பட்டியலில் இருந்து காலியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கருத்துருவை அரசு பரிசீலித்து, தற்போது பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 2636 பட்டதாரி ஆசிரியர் பணியிடம், தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள 1029 பணியிடங்கள் என மொத்தம் 3665 பணியிடங்களை, விடுபட்டோரையும் அழைத்து சான்றிதழ் சரிபார்த்து, திருத்திய பட்டியல் தயாரித்து வெளியிடலாம். ஆதிதிராவிடர் நலத்துறையில் உள்ள 266 காலிப் பணியிடங்கள், மதுரை மாநகராட்சியில் உள்ள 10 பணியிடங்களையும் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டோரில் இருந்து நிரப்பிக் கொள்ளவும் அரசு ஆணை வெளியிடுகிறது, என உத்தரவில் தெரிவித்துள்ளனர். 


பள்ளிகள் தரம் உயர்த்துவதில் சிக்கல்: நடப்பு ஆண்டில் உயர்நிலைப்பள்ளிகளை தரம் உயர்த்துவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தமிழகத்தில் 100 நடுநிலைப்பள்ளிகள், 100 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இதற்கான பணிகள் ஜூன் முதல் வாரத்திற்குள் முடிக்கப்பட்டு, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் அறிவிக்கப்படும்.நடப்பு ஆண்டில், சமச்சீர் கல்வி தொடர்பான பிரச்னைகளில் அரசு கவனம் செலுத்தி வருவதால், பள்ளிகளின் தரம் உயர்வு குறித்து இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.இதனால், புதிதாக நியமனம் செய்ய வேண்டிய ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இதுவரை நடக்கவில்லை.இதனால், மேல்நிலைப்பள்ளிகளில் 300 தலைமை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளிகளில் 400 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png