!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 1 ஜனவரி, 2015

டிவி சேனல்கள் ஒரு மணிநேரம் கல்வி செயதிகளை வழங்க கோரி தீர்மானம

நாமக்கல்: ‘அனைத்து டிவி சேனல்களிலும், கல்விக்காக தினமும் ஒரு மணி நேரம், கல்வி ஒளிபரப்பு செய்திகளை வழங்க வேண்டும்’ என, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின், மாநில பொதுக்குழுக் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாநில தலைவர் மணி தலைமை வகித்தார். மத்திய அரசின் ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைப்படி, இடைநிலை ஆசிரியர்களின் ஊதியக் குறைபாட்டை நீக்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வரும், ஏப்ரல் மாதம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில், ஆசிரியர் பிரதிநிதிகள் மாநாடு மற்றும் அகில இந்திய அளவிலான கல்விக் கருத்தரங்கு நடத்தப்படும். இதில், பஞ்சாப், புதுடில்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, ஆசிரியர்களை பங்கேற்க வைக்க வேண்டும். அனைத்து டிவி சேனல்களிலும், கல்விக்காக தினமும் ஒரு மணி நேரம், கல்வி ஒளிபரப்பு செய்திகளை வழங்க வேண்டும். தொகுப்பூதியப் பணிக்காலத்தை சேர்த்து, தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஊதியமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநில துணைத் தலைவர்கள் ரக்ஷித், முருகேசன், பாலகிருஷ்ணன், துணை பொதுச்செயலாளர்கள் செல்வராஜ், அருள்சாமி, விஜயகுமார், செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட பொறுப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png