நாமக்கல்: பிளஸ் 2 தேர்வு மையத்தில், பறக்கும் படை உறுப்பினர், மாணவர் பிட் அடிப்பதை கண்டுபிடித்தால் அறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தேர்வுத்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஓசூர் தனியார் பள்ளியில் நடந்த முறைகேட்டை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட் டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 கணிதத்தேர்வில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அறை கண்காணிப்பாளர் ஒருவர் கணித கேள்வித்தாளை தனது செல்போனில் படம் பிடித்து,
வாட்ஸ் அப் மூலம் தனது பள்ளி முதல்வர் மற்றும் பிற ஆசிரியர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதை பறக்கும் படை உறுப்பினர் கண்டுபிடித்து, கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி 4 ஆசிரியர்களை கைது செய்துள்ளனர். பிளஸ்-2 தேர்வு கண்காணிப்பு பணிக்கு செல்லும் அறை கண்காணிப்பாளர்கள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்ற தேர்வுத்துறையின் உத்தரவை மீறி இந்த செயல் நடந்துள்ளது. இதையடுத்து நேற்று தேர்வுத்துறை கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: பிளஸ்-2 தேர்வு பணிக்கு செல்லும் அறை கண்காணிப்பாளர்கள் தேர்வுத்துறையின் விதியை முழுமையாக பின்பற்றி பணியாற்ற வேண்டும். செல்போனை கொண்டு செல்லக்கூடாது. பிளஸ்-2 தேர்வு மையத்தில் பறக்கும் படை உறுப்பினர் வந்து மாணவர்கள் பிட் அடிப்பதை கண்டுபிடித்தால், அந்த மையத்தின் தேர்வு கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்யும் நிலை ஏற்படும்.
|
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.