!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 21 மார்ச், 2015

வாட்ஸ்அப்பில் வினாத்தாள் அவுட் : சிபிசிஐடி விசாரணை நடத்தப்படுமா?

ஓசூரில் முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு கிருஷ்ணகிரி , தர்மபுரி ஆகிய இடங்களிலும் பள்ளிகள் செயல்படுகின்றன. கடந்தாண்டு மாநில அளவில் அதிக சாதனை மாணவர்கள் இந்த பள்ளியில் உருவாகினர். இதனால் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. இதனால் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்பட்டது. மேலும் இந்த பள்ளியின் நிர்வாகிகளில் ஒருவரான இளங்கோவன், தனியார் மெட்ரிக் பள்ளி சங்க மாநில செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். தற்போதைய ஆளும்கட்சி அமைச்சர்களிடமும் நெருங்கிய தொடர்பில் இருப்பதால், உள்ளூரில் கல்வித்துறை அதிகாரிகள் இப்பள்ளி விவகாரங்களில் அடக்கி வாசிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அதனால் இளங்கோவனின் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்ட முறைகேட்டுக்கு கல்வித்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

கடந்தாண்டு 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவிப்பதற்கு முன்பே இந்த பள்ளிக்கு கிடைத்துள்ளது. இதற்கு தேர்வுத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்தது. எனவே தற்போது ஆசிரியர்கள் மேற்கொண்ட முறைகேட்டிலும் பள்ளி நிர்வாகத்திற்கு நேரடி தொடர்பு குறித்து முழுமையாக கண்டறிவதற்கு  சிபிசிஐடி விசாரணை நடத்தவேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png