!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 21 மார்ச், 2015

7 போலீசார், 36 பெற்றோர் சிக்கினர்
பாட்னா: பீகாரில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அவர்களின் பெற்றோர், நண்பர்கள் ஆகியோர், 'பிட்' சப்ளை செய்த விவகாரம், ஊடகங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று, பாட்னா ஐகோர்ட், இச்செய்தியையே, பொது நல மனுவாக எடுத்துக் கொண்டது. தலைமை நீதிபதி எல்.நரசிம்ம ரெட்டி, நீதிபதி விகாஷ் ஜெயின் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 'தேர்வு முறைகேடு குறித்து பீகார் கல்வித் துறை, வரும் 27ம் தேதிக்குள் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும்' என,
உத்தரவிட்டனர். உடனடியாக, கல்வி மற்றும் போலீஸ் துறைகளின் உயர் மட்டக் குழுவை கூட்டிய, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, வைஷாலி, சஹார்சா, நவாடா ஆகிய மாவட்டங்களில், முறைகேடு நடைபெற்ற நான்கு தேர்வு மையங்களில், போலீசார் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு, 'பிட்' கொடுத்து உதவிய, 36 பெற்றோரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த முறைகேட்டை கண்டு கொள்ளாமல் இருந்த, எட்டு போலீசாரும் பிடிபட்டனர். அவர்களில், தப்பி ஓடி விட்ட ஒருவரை தேடி வருவதாக, சஹார்சா மாவட்ட துணை ஆட்சியர் சதர் தெரிவித்தார்.

தேர்வில் காப்பி அடித்து, 'பாஸ்' செய்ய நினைக்கும் மாணவர்கள், வாழ்க்கையில் முன்னேற முடியாது. அது போன்ற முயற்சியை, பெற்றோரும் ஊக்குவிக்கக் கூடாது. 'பிட்' விவகாரத்தில், பீகார் பேர் கெட்டு விட்டது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png