!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 25 மார்ச், 2015

சிவகங்கை கல்வித்துறை அலுவலருக்கு' ஆசிட்' மிரட்டல்
சிவகங்கை: திருப்புவனம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை, பிற ஆசிரியர்களுக்கு இடையிலான பனிப்போர் குறித்து விசாரிக்க சென்ற கல்வித்துறை அலுவலருக்கு 'ஆசிட்' வீச்சு மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

திருப்புவனம் பகுதியில் செயல்படும் அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியை, பிற ஆசிரியர்கள் மூவருக்கு தொடர் பனிப்போர் ஏற்பட்டது. தலைமை ஆசிரியையின் புகாரில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சாராள்பேபி சம்பந்தப்பட்ட 3 ஆசிரியர்களுக்கு துறை ரீதியான 'மெமோ' கொடுத்து,சிவகங்கை காமராஜர் காலனியில் வசிக்கும் ஏ.இ.ஓ., பால்ராஜ் என்பவரை விசார ணை அதிகாரியாக நியமித்தார். விசாரணைக்குட்பட்ட பெண் ஆசிரியை ஒருவரின் கணவர் விசாரணை அறிக்கை சாதகமாக அளிக்க வேண்டும் என, மிரட்டியதாக பால்ராஜ் சிவகங்கை டவுன் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார்.

பால்ராஜ் கூறியது:

பிரச்னைக்குரிய 3 ஆசிரியரிடம் விசாரிக்க சென்றேன். இறுதியாக விசாரித்த பெண் ஆசிரியை விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை. அந்த பெண் ஆசிரியை கணவர் சாதகமாக அறிக்கை தராவிடில் என் மீது 'ஆசிட்' வீசுவதாக மிரட்டினார். 4 பேருடன் என் வீட்டுக்கே வந்து அடையாளம் காட்டியதால் உயிர் பாதுகாப்பு கருதி மாவட்ட கல்வி அதிகாரியிடமும்,போலீசிலும் புகார் செய்தேன், என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png