!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 18 ஜூன், 2015

ஜூலை 1 முதல் வாகன ஓட்டியும் உடன் பயணிப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்: தமிழக அரசு

2
சென்னை சாலையில் ஒருநாள். | கோப்புப் படம்: எம்.வேதன்

ஜூலை 1 முதல் இரு சக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பயணிப்பவர் தலைக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''01.07.2015 முதல் இரு சக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பயணிப்பவர் தலைக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.
தவறும் பட்சத்தில், மோட்டார் வாகனச் சட்டம் - 1988, பிரிவு 206-இல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, சம்மந்தப்பட்ட இரு சக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுநரின் உரிமம் ஆகியவை பறிமுதல் செய்யப்படும்.
இந்திய தர நிர்ணய சான்று பெற்ற புதிய தலைக்கவசம் மற்றும் அதனை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை காண்பித்தால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் விடுவிக்கப்படும் என இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தத்து குறிப்பிடதக்கது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png