!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 17 ஜூன், 2015

இலவச பஸ் பாஸ் பெறுவதில் மாணவர்களுக்கு ஆர்வமில்லை?

விருதுநகர்: இலவச பஸ் பாஸ் கோரி மாணவர்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளதால் பள்ளி கல்வித்துறை அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு 2015-16க்கான இலவச பஸ் பாஸ் விண்ணப்பங்களை போக்குவரத்து கழகங்களுக்கு அனுப்பி வைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. கடந்த 15 நாட்களில் 8 லட்சத்து 32 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முந்தைய கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு 20 லட்சத்து 12 ஆயிரம் இலவச பஸ் பாஸ்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கையில் பாதியளவு கூட விண்ணப்பங்கள் வராததால் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இலவச பஸ் பாஸ் பெறுவதில் மாணவர்களுக்கு ஆர்வம் இல்லையா அல்லது தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பங்களை பெற்று அனுப்புவதில் அக்கறை செலுத்தவில்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ‘‘சென்னை, காஞ்சிபுரம், கடலுார், கிருஷ்ணகிரி, அரியலுார், திருவாரூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்துார், திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து மிக குறைந்த எண்ணிக்கையில் விண்ணப்பங்கள்  அனுப்பட்டுள்ளன. தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். எனவே மாணவர்களிடம் இருந்து மீண்டும் விண்ணப்பங்களை பெற்று ஜூன் 19க்குள் தலைமையாசிரியர்கள் அந்தந்த போக்குவரத்து கழகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்,’’ என குறிப்பிட்டுள்ளார்.


Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png