!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 17 ஜூன், 2015

ஆய்வக உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையிலேயே நியமனம் ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு

ஆய்வக உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையிலேயே நியமனம் நடைபெறும் என்று ஐகோர்ட்டில் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 

ஆய்வக உதவியாளர்கள் 

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் 4,362 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த மே 31-ந்தேதி தமிழகம் முழுவதும் எழுத்துத் தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் சுமார் 8 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதியுள்ளனர்.

இந்த நிலையில், இந்த தேர்வு முறையை எதிர்த்து காஞ்சீபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் உட்பட பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 

தடை வேண்டும்

அதில், ‘ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு, போட்டியில் இருந்து ஆட்களை குறைப்பதற்காக நடத்தப்பட்டுள்ளது. எழுத்து தேர்வில் பெறப்படும் மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும் நேர்முகத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிரானது. எனவே, இந்த தேர்வு நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும். கடந்த ஏப்ரல் 22-ந் தேதி வெளியிடப்பட்ட தேர்வு அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தனர். 


பதில் மனு 

இந்த மனுவை கடந்த 3-ந்தேதி விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன், தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர், ஆய்வக உதவியார் பணிக்கு எந்த முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்? என்பது குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘ஆய்வக உதவியாளர் பணிக்கு, நேர்முகத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள், வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png