இன்னும் ஒன்பது நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும்
புதுடில்லி: 'கடந்த, 2005க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள், இன்னும் ஒன்பது நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள், வங்கிகளில் கொடுத்து இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் அல்லது வங்கி கணக்குகளில், 'டிபாசிட்' செய்யலாம்' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ரிசர்வ் வங்கிவட்டாரங்கள் கூறுகையில், 'குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்படுவது, சர்வதேச அளவில் பின்பற்றப்படும் பொதுவான நடைமுறை தான். இதற்கு முன், நம் நாட்டில் இதுபோன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது' என, தெரிவித்தன.
அழித்தது எவ்வளவு?
* கடந்த ஜனவரியுடன் முடிவடைந்த, 13 மாத காலத்தில், 1,000 ரூபாய் நோட்டுகள் உட்பட, 164 கோடி எண்ணிக்கை கொண்ட,21 ஆயிரத்து, 750 கோடி ரூபாய்மதிப்பிலான ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கியால் பெறப்பட்டு, அவை அழிக்கப்பட்டுள்ளன.
*ரிசர்வ் வங்கியால் அழிக்கப்பட்ட நோட்டுகளில், 100 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, 87 கோடி; 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, 56 கோடி; 1,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, 21 கோடி. இந்த தகவல், கடந்த மார்ச் மாதம் பார்லிமென்டில் தெரிவிக்கப்பட்டது.
ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர், வங்கிகளில் கொடுத்து, புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, கடந்த டிசம்பர் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின், ஜூன், 30ம் தேதி வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் முடிவடைய, இன்னும் ஒன்பது நாட்களே உள்ளன. இதனால், 'பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர், வங்கிகளில் தங்கள் கணக்கில் அவற்றை,டிபாசிட் செய்யலாம் அல்லது வங்கிகளில் கொடுத்து, புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ரூபாய் நோட்டின் பின்புறத்தின் கீழ் பகுதியில், அந்த நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு, சிறிய எழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.அப்படி குறிக்கப்படவில்லை என்றால், அது, 2005க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டு; அந்த நோட்டுகள் செல்லுபடியாகாது என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 2005க்கு முன் அச்சிடப்பட்ட நோட்டுகள் எவை, அதற்கு பின் அச்சிடப்பட்ட நோட்டுகள் எவை என்பதை எளிதில் அடையாளம் காண முடியும்.

0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.