!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 17 ஜூன், 2015

454 புதிய ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு

ஆதிதிராவிட பள்ளிகளில் இடைநிலைக் கல்வி ஆசிரியர்களுக்கான, 454 பேர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில், 1,096 ஆதிதிராவிடர்; 299 பழங்குடியினர் நலப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், 669 இடை நிலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்தது. கடந்த 2013ல், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
ஆனால், இதில், ஆதிதிராவிடர் மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்டோரையும் நிரப்பக் கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றம், தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது. பின், கடந்த ஏப்., 16ம் தேதி இடைக்கால தடை நீக்கப்பட்டு, 70 சதவீதம், அதாவது, 468 ஆசிரியர்களை பணியில் சேர்க்கலாம் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேர்வு முடிவுகளை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. இதில், 454 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்காக, 14 இடங்கள், 'ரிசர்வ்' செய்து வைக்கப்பட்டுள்ளன.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png