புத்தகத்தை பார்த்து கும்பலாக பி.எஸ்சி. தேர்வு எழுதிய மாணவர்கள் : பீகாரில் மீண்டும் ஒரு தேர்வு மோசடி
பீகார்: போலி பட்டப்படிப்பு சான்றிதழ் புகாரால் டெல்லி சட்டத்துறை அமைச்சர் பதவியை இழந்துள்ள நிலையில் பீகாரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து புத்தகங்களை பார்த்து பி.எஸ்சி பட்டப்படிப்பு தேர்வு எழுதியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளி ஒன்றின் கட்டிடத்தின் மேல் ஏறி மாணவர்களின் உறவினர்களும் நண்பர்களும் விடைகளை தாள்களில் எழுதி வீசி எறிந்தது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் முன்னிலையிலேயே இந்த சம்பவம் அரங்கேறியது. தற்போது மீண்டும் அங்கு தேர்வு கேளிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. சமஸ்த்திப்பூர் என்ற இடத்தில் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி தேர்வு எழுதிய மாணவர்கள் அருகருகே நெருக்கமாக உட்கார்ந்து புத்தகங்களையும், தாள்களில் எழுதப்பட்ட குறிப்புகளையும் பார்த்து தேர்வு எழுதினர். சிலர் செல்போன்களையும் பார்த்து தேர்வு எழுதினர். 800 மாணவர்கள் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத வேண்டிய இடத்தில் 3,000 மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதினர். ஆனாலும் இதனை ஆசிரியர்களோ, தேர்வு மைய கண்கானிப்பாளர்களோ கண்டு கொள்ளவில்லை. மாணவர்கள் தேர்வு எழுத உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்பதால் தங்களால் இயன்ற அளவில் தேர்வை நடத்தியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.