ரத்து ! : மாணவர்கள் மோதலால் தனியார் பஸ் போக்குவரத்து... : கமுதியில் இருந்து விருதுநகர் செல்ல முடியாத நிலை
கமுதி: பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால், பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள், பொதுமக்கள் ஆட்டோக்களில் பயணிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச் சுழியில் உள்ள பள்ளியில் திருச்சுழி அருகே உள்ள எம்.புதூரைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கும், மண்டல மாணிக்கத்தில் இருந்து செல்லும் மாணவர்களுக்கும் படிக்கின்றனர். பஸ்சில் செல்லும்போது இவர்களுக்கு இடையே கடந்த ஜூன் 8 ல் தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது. இது குறித்து திருச்சுழி போலீசார் மண்டல மாணிக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் 3 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர். இதனால் இப்பகுதி மாணவர்கள் திருச்சுழிக்கு செல்லும் போது தாக்கப்படும் அபாயம் உள்ளது. இதன் எதிரொலியாக, கமுதியி லிருந்து மண்டல மாணிக்கம், திருச்சுழி வழியாக காரியாபட்டி, அருப்புக்கோட்டை, மதுரைக்கு இயக்கப்படும் தனியார் பஸ்கள் முற்றிலும் ரத்து செய்யப் பட்டுள்ளன. அரசு பஸ்களும் குறைந்தளவே இயக்கப்படுகின்றன. கமுதியி லிருந்து மண்டல மாணிக்கம், திருச்சுழிக்கு சென்று பணியாற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் ஆட்டோக்களில் பயணிக்கும் நிலை உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவற்கு கூட பொதுமக்கள் கூடுதல் செலவு செய்து ஆட்டோ, சரக்கு வாகனங்களில் கமுதிக்கு செல்ல வேண்டி இருப்பதால் பலரும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுத்து, மாணவர்கள், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி,கடந்த 4 நாட்களாக ரத்து செய்யப்பட்ட பஸ் போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.