!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 28 ஜூன், 2015

அரசுக்கு எதிரான வழக்கு விவரங்களை சேகரிக்காத தமிழக சட்டத்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம்
அரசுக்கு எதிரான வழக்குகளின் விவரங்களை பராமரிக்காத சட்டத்துறை அதிகாரிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
.

இழுத்தடிப்பு 

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு ஒரு பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு உரிய காலத்தில் பதில் மனு தாக்கல் செய்யாமல் இழுத்தடிப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து நீதிபதிகள் கூறியதாவது:-

ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தமிழக அரசு சரியான நேரத்தில் பதில் மனு தாக்கல் செய்வது இல்லை. இது காலகாலமாக நடந்து வருகிறது. அரசுக்கு எதிரான வழக்குகளின் விவரங்களை அரசு எப்படி பராமரிக்கிறது? என்று சட்டத்துறை உயர் அதிகாரியை அழைத்துக் கேட்டபோது, நிலுவையின் உள்ள வழக்குகளின் புள்ளி விவரங்கள் அந்த துறை அதிகாரிகள் இதுவரை சேகரித்து வைக்கவில்லை என்று தெரிகிறது. 

வழக்கு விவரங்கள்

ஐகோர்ட்டில், அரசு தொடர்புடைய வழக்குகள் எத்தனை உள்ளது? என்பது கூட அதிகாரிகளுக்கு தெரியவில்லை. அப்படியென்றால் அவர்கள் எந்த முறையில் வழக்குகளை கண்காணிக்கின்றனர்? என்ன செய்கின்றனர்? ஏற்கனவே வழக்குகளின் விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்க வேண்டும். ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தியுள்ள விவரங்கள், பதில் மனு தாக்கல் செய்யவேண்டிய விவரங்கள் என்று அனைத்தையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யவேண்டும் என்று நீண்ட காலமாக அரசுக்கு கூறி வருகின்றோம். ஆனால் இதை அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. 

இந்த முறையை அரசு பின்பற்றவில்லை என்றால் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை அவர்களால் எங்கும் சேகரிக்க முடியாது. பல மாநில அரசுகள் வழக்குகளின் விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து, பராமரித்து வருகின்றனர். 

இவ்வாறு நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். 

நிதி ஒதுக்கீடு இல்லை

அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, இதுகுறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்வதாக கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்டு 10-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் காஜா மொய்தீன் ஸ்தி, ‘கடந்த நிதியாண்டில் நீதித்துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதியை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது? என்ற விவரங்களை தமிழக அரசு தாக்கல் செய்யவில்லை. அதனால், நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறினார். 

தீவிரமானது 

இதைக்கேட்ட நீதிபதிகள், தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். நிதி ஒதுக்கீடு தொடர்பான இந்த குற்றச்சாட்டு தீவிரமானதும் என்றும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து அரசு பிளீடர், இதுகுறித்தும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்வதாக கூறினார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png