!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 28 ஜூன், 2015

கோர்ட் உத்தரவை அமல்படுத்தாவிட்டால் சிறை:அரசு அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கண்டிப்பு
'நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனில், அதிகாரிகளை சிறைக்கு அனுப்ப நேரிடும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.நாமக்கல்லைச் சேர்ந்த, கூட்டுறவு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், மற்ற பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் இடையே, சம்பள விகிதத்தில் வேறுபாடு இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், 2004ல், வழக்கு தொடரப்பட்டது.


சாதகமான உத்தரவு:வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆசிரியர்களுக்கு சாதகமான உத்தரவை பிறப்பித்தது. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், பள்ளி நிர்வாகம் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கும், உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னும், உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. இதையடுத்து, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின், மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி முன்னாள் தனி அதிகாரிக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதிகாரிகளை தண்டிப்போம்:இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி கூறியதாவது:தங்கள் உரிமைக்காக, 2004ல் இருந்து, இந்த ஆசிரியர்கள், நீதிமன்றம் மூலம் போராடுகின்றனர். நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னும், அதை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை.
இதெல்லாம் சரியாக இல்லை; அதிகாரிகளை தண்டிப்போம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தண்டிக்கவில்லை என்றால், இந்த நிலை மாறாது. அவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும். அருகில் உள்ள சிறை எது என்று சொல்லுங்கள். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் எண்ணிக்கை, தற்போது அதிகரித்து வருகிறது. இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.

அவமதிப்பு வழக்கு உயர்வு:அடுத்ததாக, வனத்துறைக்கு எதிரான ஒரு வழக்கிலும், 'நீதிமன்ற உத்தரவை, வேண்டுமென்றே நிறைவேற்றாத அதிகாரிகளை தண்டிப்போம்' என, தலைமை நீதிபதி கண்டிப்புடன் கூறினார். பின், இந்த வழக்கு விசாரணையை, ஜூலை, 14ம் தேதிக்கு, 'முதல் பெஞ்ச்' தள்ளி வைத்தது.கடந்த, 1990ல், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் எண்ணிக்கை, 421. இது, 2012ல், 2,434 ஆக உயர்ந்துள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png