!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 26 ஜூன், 2015

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, பொன்மலைப்பட்டியில், தூய இருதய மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. பள்ளி தலைமை ஆசிரியராக பாஸ்கரன் உள்ளார். சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் படிக்கின்றனர்.

நேற்று காலை, ப்ளஸ் 2 வணிக கணிதத்துறை "டி' மற்றும் "இ' பிரிவை சேர்ந்த மாணவர்கள், பெற்றோருடன் பள்ளிக்கு வந்தனர். தலைமை ஆசிரியரை சந்தித்த பெற்றோர்கள், "பள்ளி தமிழ் ஆசிரியர் கண்ணன், அக்கவுண்டன்சி பாட ஆசிரியர் ரெக்ஸின் சகாயராஜ், ஆகியோர் மாணவர்களை தகாத வார்த்தைகளில் திட்டி, அடிப்பதாக தெரிவிப்பதாக,' புகார் கூறினார்.
இதையடுத்து, ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். 
இதில், சுமூக தீர்வு கிடைக்காததால், மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, தலைமை ஆசிரியர் அறை முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பாதுகாப்பு கருதி, பொன்மலை போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தியிடம் கேட்டபோது, ""இது குறித்து தகவல் வந்துள்ளது, பள்ளியில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மாலையில், பள்ளிக்கு வந்த பொன்மலை போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரவடிவேல், மாணவ ர்கள் மற்றும் பள்ளி நிர்வா கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி னார். 
தமிழாசிரியர் கண்ண னுக்கு பள்ளி நிர்வாகம் மெமோ வழங்குவதாக தெரிவித்த தையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png