சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கலாமா?அரசுகளுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
சிறுபான்மையினர் உரிமைகளில், யாரும் தலையிடக் கூடாது என, அனைத்து கலெக்டர்களுக்கும் உத்தரவிடக் கோரி தாக்கலான வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
பொதுநல மனு : மதுரை வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம் தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்சி, பாலக்கரை தனியார் பள்ளியில், நிலவேம்பு கசாயம் அருந்துமாறு, முஸ்லிம் மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றனர். ரம்ஜான் மாதத்தில், முஸ்லிம்கள், நோன்பு கடைபிடிப்பர். இச்சூழ்நிலையில், நிலவேம்பு கசாயம் அருந்த கட்டாயப்படுத்தக் கூடாது என, எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 23ம் தேதி, முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் : தஞ்சாவூரில் உள்ள ஒரு கல்லுாரியில், முஸ்லிம் மாணவியர், அதிகளவில் படிக்கின்றனர். 'பர்தா' அணிந்து வரும் மாணவியரிடம், பர்தாவை நீக்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர்; இதை எதிர்த்தும் போராட்டம் நடந்தது.
சிறுபான்மையினர் உரிமைகளில், யாரும் தலையிடக் கூடாது என, அனைத்து கலெக்டர்கள், அரசுத் துறைகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்', மத்திய மனிதவளத் துறை செயலர், தமிழக தலைமைச் செயலர், டி.ஜி.பி., ஆகியோருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.