!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 26 ஜூன், 2015

பள்ளி மாணவர்களும்'ரோபோ' தயாரிக்கலாம்


பள்ளி மாணவர்களும் எளிய முறையில் 'ரோபோ' தயாரிக்க முடியும்,” என, 'ரோபோடிக்' ஆராய்ச்சி மைய கரூர் மண்டல இயக்குனர் செ.ரவீந்திரகுமார் தெரிவித்தார்.தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான 'ரோபோட்டிக்' பயிலரங்கம் திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., இன்ஜினியரிங் கல்லுாரியில் நடந்தது. கல்லுாரி முதல்வர் பழனிச்சாமி துவக்கி வைத்தார்.
மின்சாரவியல்துறை தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
ரவீந்திரகுமார் பேசியதாவது: ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் 'ரோபோ' அதிகளவில் பயன்படுத்தப் படுகிறது. தற்போது நம் நாட்டிலும் 'ரோபோ' பயன்படுத்த துவங்கிவிட்டனர். தொழிற்துறையில் 'லைன் பாலோவர் ரோபோ,' 'சர்வேலன்ஸ் ரோபோ,' மருத்துவத்தில் 'பயோ மெடிக்கல் ரோபோ,' விவசாயத்தில் 'அக்ரி ரோபோ' பயன்படுகின்றன.
'ரோபோக்களை' பள்ளி மாணவர்களும் எளிதில் தயாரிக்க முடியும். அவர்களுக்கு டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைகளில் பயன்படும் 'லைன் பாலோவர் ரோபோ' தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கிறோம். இந்த 'ரோபோக்கள்' ஒரே நேர்கோட்டில் பொருட்களை எடுத்து செல்ல பயன்படுகிறது. இதனை தயாரிக்க 2 நாட்கள் பயிற்சி பெற்றால் போதும். 'ரோபோ' தயாரிக்க தேவையான தளவாட பொருட்கள் டில்லி நொய்டா, மும்பையில் கிடைக்கின்றன. அவற்றை 'ஆன்-லைன்' மூலம் பெறலாம், என்றார். பயிற்சியில் 150 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png