!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 3 ஜூலை, 2015

கருணைப் பணி வழங்க 12 ஆண்டுகள் தாமதிப்பதா : உயர்நீதிமன்றம் உத்தரவு
கருணைப் பணி நியமனம் கோரிய மனு மீது நடவடிக்கை எடுக்காமல் 12 ஆண்டுகள் கிடப்பில் போட்டு விட்டு தற்போது நிராகரித்ததை ஏற்க முடியாது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.புதுக்கோட்டை ராம்குமார். இவரது தந்தை மீமிசல் அரசு மேல்நிலை பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்தார். இவர் 1998 அக்.,19 ல் இறந்தார். மகன் ராம்குமாருக்கு கருணைப் பணி நியமனம் கோரி அவரது தாய் 2000 ல் தமிழக அரசிடம் விண்ணப்பித்தார்
. ராம்குமாரின் சகோதரருக்கு தகுதி அடிப்படையில் 2012 ல் இடைநிலை ஆசிரியர் பணி கிடைத்தது. அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர், ''உங்கள் சகோதரர் அரசு ஊழியர். உங்களுக்கு கருணைப் பணி வழங்க முடியாது,'' என 2013 ஜூன் 13 ல் ராம்குமாரின் விண்ணப்பத்தை நிராகரித்தார். அதை ரத்து செய்து பணி வழங்க உத்தர விடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ராம்குமார் மனு செய்தார்.நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.அரசு வழக்கறிஞர், “அரசு உத்தரவுப்படி குடும்பத்தில் யாராவது ஒருவர் பணியில் இருந்தால் கருணைப் பணி வழங்க முடியாது,” என்றார். நீதிபதி: மனுதாரரின் தந்தை 1998 ல் இறந்துள்ளார். மனுதாரரின் தாய் தன் மகனுக்கு கருணைப் பணி நியமனம் கோரி 2000 ல் விண்ணப்பித்துள்ளார். மனு மீது எவ்வித நடவடிக்கையுமின்றி 12 ஆண்டுகளாக அரசுத் தரப்பில் நிலுவையில் வைத்துள்ளனர். இதற்கிடையே மனுதாரரின் சகோதரர் மேஜரான பின், தகுதி அடிப்படையில் அரசுப் பணியில் சேர்ந்துள்ளார். அதை அடிப்படையாகக் கொண்டு மனுதாரருக்கு பணி மறுப்பது நியாயமற்றது. மனுதாரரின் சார்பில் அவரது தாய் அளித்த மனுவை, மனுதாரர் மேஜரான சமயத்தில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பித்திருந்தால், அப்போதே கருணைப் பணி வாய்ப்பு கிடைத்திருக்கும்.
மனுவை உரிய காலத்தில் பரிசீலிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது நிராகரித்ததை ஏற்க முடியாது. பணி மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கல்வி மாவட்ட அலுவலர் 2 மாதங்களில் பரிசீலித்து பணி நியமனம் பற்றி தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார். மனுதாரர் வழக்கறிஞர் டி.லெனின்குமார் ஆஜரானார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png