!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 1 ஜூலை, 2015

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 1-ந்தேதி சென்னையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்: ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில் உயர் மட்டக்குழு கூட்டம் நேற்று சென்னை எழும்பூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் இரா.தாஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொழிற்சங்க ஆசிரியர்கள் சங்க தலைவர் நேரு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதல் நிலை பட்டதாரிகள் சங்க மாநில தலைவர் மணிவாசகம், தமிழ்நாடு தொடக்கபள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ரெங்கராஜன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழக தலைவர் தியாகராஜன், தமிழ்நாடு உயர் நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர் சாமி சத்திய மூர்த்தி மற்றும் இளங்கோவன் உள்பட பல ஆசிரியர்கள் சங்க தலைவர்கள் கலந்துகொண்டனர்.


மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போல தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலைஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 1-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த போராட்டம் நடத்தப்பட்ட பின்னர் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என்று நம்புகிறோம். அவ்வாறு அழைக்கவில்லை என்றால் வேலை நிறுத்தபோராட்டத்தை நடத்தவும் என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png