!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 1 ஜூலை, 2015

அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் பணியிலிருந்து ஓய்வு


ரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் பணியிலிருந்து செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றார்.

 பள்ளிக் கல்வித் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், மாவட்டக் கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அரசுத் தேர்வுகள் இயக்குநராக 2013-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். கடந்த 2 ஆண்டுகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் இருந்துவந்த பல்வேறு சிக்கலான நடைமுறைகளை அகற்றி, தேர்வுப் பணிகளை எளிமைப்படுத்தினார்.

 தேர்வறை முறைகேடுகளைத் தடுக்க விடைத்தாள் பக்கங்கள் அதிகரிப்பு, விடைத்தாளின் முதல் பக்கத்தில் மாணவர்களின் விவரங்களை அச்சிட்டு வழங்கியது, விடைத்தாள்களில் டம்மி எண்ணுக்குப் பதிலாக ரகசிய பார்கோடு எண் முறையை அறிமுகம் செய்தது, விடைத்தாள் நகல்களை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகளை இவர் அறிமுகப்படுத்தினார்.
 தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை பணியாளர் சங்கம் சார்பில் பிரிவு உபசார விழா டி.பி.ஐ. வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 கூடுதல் பொறுப்பு: அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் ஓய்வுபெற்றதையடுத்து, அந்தப் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலாளர் வசுந்தராதேவியிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png