விலையில்லா சைக்கிள்கள் வழங்குவது எப்போது? கல்வித்துறை உத்தரவால் மாணவர்கள் ஏக்கம்
மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு வழங்கிட, அரசின் இலவச சைக்கிள்கள் தயார் நிலையில் இருந்த போதிலும், கல்வித்துறை இயக்குனரின் உத்தரவால் நிறுத்தி வைத்துள்ளதால், மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
தமிழகத்தில் வறுமை காரணமாக கல்வி பயிலாமல் இருப்பதைத் தவிர்த்திட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சீருடை, பாட புத்தகம், நோட்டு, காலணி உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களும் இலவசமாக வழங்கி வருகிறது.அதேப்போன்று, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை உயர்கல்வி படிக்க ஊக்குவிக்கும் பொருட்டு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
அதில், சைக்கிள்கள் கல்வி ஆண்டு துவக்கத்திலேயே வழங்கப்படும். இதனால், கிராமப் பகுதியில் இருந்து பிற பகுதிகளில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றுவர மாணவர்களுக்கு வசதியாக இருந்தது.அதன்படி இந்த கல்வி ஆண்டு துவக்கமான ஜூன் மாதம் பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கான பாடபுத்தகம், சீருடை உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன. அதேப்போன்று, பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை முடிந்ததும் அவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்காக அரசு சார்பில் "ஏவொன், டிஐ சைக்கிள் மற்றும் ஹீரோ சைக்கிள் கம்பெனிகளுக்கு கொள்முதல் ஆணை கடந்த ஆண்டே வழங்கப்பட்டது.அந்த நிறுவனங்களும், ஒவ்வொரு பள்ளிகளுக்குத் தேவையான சைக்கிள்களின் எண்ணிக்கை விவரங்களை சேகரித்து அதன் உதிரி பாகங்களை கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அந்தந்த பள்ளிகளில் இறக்கி, சைக்கிள் பூட்டி தயார் நிலையில் வைக்கப்பட்டது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 130 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் 11 ஆயிரத்து 647 மாணவர்கள், 15 ஆயிரத்து 661 மாணவியர்கள் என மொத்தம் 27 ஆயிரத்து 308 பேருக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது.இதனை பிளஸ் 1 வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை முடிந்ததும், ஜூன் மாத இறுதியில் வழங்கிட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கடந்த 2ம் தேதி பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, இலவச சைக்கிள்களை மறு உத்தரவு வரும் வரை வழங்காமல், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இந்த உத்தரவை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி, அவர்களின் ஒப்புதல் பெற்று வைத்திருக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.பள்ளிக் கல்வி இயக்குனரின் உத்தரவைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இலவச சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்காமல், அந்தந்த பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் அல்லது கூட்ட அரங்குகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.இதனால், பல பள்ளிகளில் இடவசதியின்றி மாணவர்கள் மரத்தடியில் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் அரசின் இலவச சைக்கிள் கிடைக்காததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.