ஊக்கநிதி இல்லை மாணவர் கவலை
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க 2011--12ல் சிறப்பு ஊக்கத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் 10 ம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களுக்கு தலா ரூ.1,500ம், பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகின்றன. இந்த தொகை பிளஸ் 2 முடித்தவுடன் மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. தற்போது 2014--15 ஆண்டுக்கான ஊக்க நிதி வழங்கப்பட்டது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 முதல் 100 மாணவர்களுக்கு ஊக்க நிதி கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஊக்கநிதி கேட்டு முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அலைகின்றனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வங்கி கணக்கு செயல்பாட்டில் இல்லாதோருக்கு ஊக்கநிதி விட்டுப் போயிருக்கலாம். பாதிக்கப்பட்டோரின் மனுக்களை அரசுக்கு அனுப்பியுள்ளோம். பணம் கிடைத்தவுடன் மாணவர்களுக்கு வழங்கப்படும், என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.