போலி சான்றிதழ் தயாரிப்பு: ஆசிரியர் உட்பட 3 பேர் கைது
திருவாரூரில், எட்டாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழை, போலியாக தயாரித்த, அரசு பள்ளி ஆசிரியர் உட்பட, மூன்று பேர் கைது
செய்யப்பட்டனர்.திருவாரூரில், மன்னார்குடி பை - பாஸ் சாலையில், கடந்த 11ம் தேதி, இரவு 10:30 மணியளவில், நெடுஞ்சாலை ரோந்து போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக, இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த, வடசேரி முகமது இம்ரான்கான், 27, என்பவரை நிறுத்தி, சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த, எட்டாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழில் சந்தேகம் ஏற்பட்டு, மன்னார்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில், ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ள, இம்ரான்கான் தம்பி ஷேக் என்பவருக்கு, சிங்கப்பூரில் நிரந்தரமாக வேலை செய்ய, எட்டாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் தேவைப்பட்டு உள்ளது.இதற்காக, நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் மனோகரன், 53, மன்னார்குடியில், 'டிடிபி' சென்டர் நடத்தி வரும் முருகன், 40, ஆகியோர் உதவியுடன், ஆலங்கோட்டை திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்தது போல், போலி மாற்றுச் சான்றிதழை தயாரித்தது தெரியவந்தது.இதையடுத்து, போலி ஆவணங்கள் மற்றும் முத்திரை தயாரித்த குற்றத்திற்காக, இம்ரான்கான், முருகன், மனோகரன் ஆகியோர் மீதும், இந்திய தண்டனை சட்டத்தின்படி வழக்கு பதிந்து, மூன்று பேரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.