பல்கலை கஜானாவில் தூங்கும் ரூ.40 கோடி
தமிழக பல்கலைக் கழகங்களுக்கு ஒதுக்கிய,மத்திய அரசின் ஐந்தாண்டுத் திட்ட நிதியில், 40 கோடி ரூபாய் இன்னும் செலவிடப்படவில்லை. இதற்கான கணக்கைத் தாக்கல் செய்யும்படி, பல்கலைக் கழக மானியக் குழுவான - யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகளுக்கு, பல விதமான கல்விச் சேவைகளுக்காக, ஐந்தாண்டுத் திட்ட அடிப்படையில், யு.ஜி.சி., மூலம், மத்திய அரசு நிதி வழங்குகிறது.
கணக்கு தணிக்கை அலுவலக அறிக்கைப்படி, நாட்டில் உள்ள, 156 பல்கலைகளுக்கும்,
ஐந்தாண்டுத் திட்ட நிதியாக, 2012 முதல், 2015 வரை, 841 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில், 236 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டு, அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்னும், 561 கோடி ரூபாய்க்கு, பல்கலைகள் கணக்கு காட்டவில்லை. இந்தப் பட்டியலில், தமிழகத்தில், அண்ணா பல்கலை, அண்ணாமலை பல்கலை மற்றும் காமராஜ் பல்கலை உட்பட, 11 பல்கலைகள் உள்ளன. இந்தப் பல்கலைகளுக்கு, 68 கோடி ஒதுக்கப்பட்டதில், 28 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டு உள்ளதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள, 40 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி என்னவாயிற்று; அதில், ஏதாவது பணிகள் செய்திருந்தால், அதற்கான கணக்கை காட்டும்படி, பல்கலைகளுக்கு யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.