30ம் தேதி அனைத்து துறை செயலர்கள் கூட்டம்
சட்டசபை மானிய கோரிக்கை தொடர்பாக, அனைத்து துறை செயலர்கள் கூட்டம், வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது.தமிழக அரசின், 2015 - 2016க்கான, வரவு - செலவு திட்ட அறிக்கை, மார்ச், 25ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. துறை வாரியாக, மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்த, இன்னும் சட்டசபை கூட்டம் நடத்தப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும், கூட்டம் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, அமைச்சர்கள் தங்கள் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, ஆய்வு செய்து வருகின்றனர். மானிய கோரிக்கை விவாதத்தின்போது வெளியிடுவதற்கான புதிய அறிவிப்புகள் குறித்து முடிவு செய்வதற்காக, அனைத்து துறை செயலர்கள் கூட்டம், தலைமைச் செயலர் ஞானதேசிகன் தலைமையில், தலைமைச் செயலகத்தில், வரும், 30ம் தேதி நடைபெற உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.