எம்.பி.பி.எஸ்., இடம் கிடைத்ததால் கால்நடை படிப்பை கைவிட்ட 100 பேர்
கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தில், இரண்டாம் ஆண்டில் படித்து வந்த, 100 மாணவர்கள், படிப்பை பாதியில் விட்டு, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 மாணவர்கள், அதிகம் பேர், அதிக மதிப்பெண்கள் பெற்றனர். கடும்போட்டி நிலவியதால், எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் கிடைக்காதவர்கள், கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்ந்தனர்.
அவர்களில் பலர், இந்த ஆண்டு, மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிட்டனர். இதுகுறித்து, கால்நடை மருத்துவ பல்கலை அதிகாரிகள் கூறியதாவது:கால்நடை மருத்துவப் பல்கலையில், கடந்த ஆண்டு சேர்ந்து, இரண்டாம் ஆண்டு படித்து வந்த, மாணவ, மாணவியர், சமீபத்தில் நடந்த, மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றனர். இவர்களில், கடந்த ஆண்டில், சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்த, 100 பேர், எம்.பி.பி.எஸ்., படிப்பில் இடம் பெற்றனர்.
கால்நடை மருத்துவப் படிப்பை, இரண்டாம் ஆண்டில் விட்டுவிட்டு, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட்டனர். அவர்களின் இடங்களில் வேறு யாரையும் சேர்க்க முடியாது; அந்த இடங்கள் வீணாகிவிட்டன. இதனால், பல்கலை ஆசிரியர்களின் நேரமும், அரசு பணமும் விரயம் ஆகியுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.