!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 14 ஜூலை, 2015

ஆசிரியர்கள் விடிய, விடிய போராட்டத்தால் அவினாசிலிங்கம் பல்கலையில் பரபரப்பு; காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு
                     கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைகழகம் மத்திய அரசின், பல்கலைகழக மானியக்குழு நிதியுதவி பெறும் நிலையில், ஒப்பந்தத்தை மத்திய மனித வள மேம்பாட்டு துறையில் ஜூன் 30ம் தேதியுடன் (எம்ஓயு) புதுப்பிக்க வேண்டும்.
ஆனால் பல்கலைகழக அறக்கட்டளை நிர்வாகம் ஒப்பந்தத்தை புதுப்பிக்காதால், பல்கலைகழக பேராசிரியையைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கடந்த 10 நாட்களாக பல்கலைகழகம் இழுத்து மூடப்பட்டன. நேற்று பல்கலைகழகம் திறக்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தம் புதுப்பிப்பது தொடர்பாக வேந்தர் சரியான பதில் அளிக்காததால், காலை முதல் 200 க்கும் மேற்பட்ட பேராசிரியையைகள் வகுப்பிற்கு செல்லாமல் புறக்கணித்தனர். இரவு விடிய, விடிய பல்கலைகழகத்தின் ஒன்றாம் எண் நுழைவு வாயிலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலை நிர்வாகத்தினர் கேட்டை இழுத்து மூட முயன்ற போது, அதை தடுத்து கோஷம் எழுப்பினர். கோவை வடக்கு தாசில்தார் ரவி, பல்கலைகழகத்திற்கு வந்து பேச்சுவார்தை நடத்தினார். ஆனால் சமரசம் ஏற்படவில்லை. இரவு 12:00 மணிக்கு பிறகும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், பல்கலை கழக நிர்வாகம் இன்று முதல் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளதாக நேற்று இரவு அறிவித்தது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png