!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 18 ஜூலை, 2015

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி நாள்


நிதியாண்டு 2014-15-க்கான வருமான வரியை சம்பளதாரர்கள் தாக்கல் செய்ய வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாள் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
 இது தொடர்பாக வருமான வரித் துறையின் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
 ""சம்பளம், வீடு மூலம் வருமானம் பெறுவோர், தனியாக தொழில் செய்வோர் 
 என தணிக்கைக்கு உட்படாத வகையில் வருவாய் பெறுவோர் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
 தணிக்கைக்கு உட்பட்டு வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்வோர் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
 எளிய படிவம்: மாத ஊதியம், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடு மூலம் வருவாய் பெறுவோர் பயன்படுத்த இந்த ஆண்டு "ஐடிஆர்-2ஏ' என்ற எளிய படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 மேலும் 80 வயதுக்குக் கீழே உள்ளோர், கீழ்க்கண்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் மின்னணு முறையில் மட்டுமே வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்:-
 1. ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளோர்; 
 2. வருமான வரிப் பிடித்தத் தொகையைத் திரும்பப் பெறக் கோருவோர்; 
 3. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் அல்லது தொழில் மூலம் வருமானம் ஈட்டுவோர்.
 அலுவலக எல்லையை தெரிந்துகொள்ள...
 வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர், தங்களது வருமான வரி அலுவலக எல்லையை "www.tnincometax.gov.in" என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png