பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 46 மாணவர்கள் காயம்
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே, பள்ளி வேன் கவிழ்ந்ததில், 46 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்; மூன்று மாணவர்கள், ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.பந்தலுார் அருகே, உப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்ல, இரண்டு ஆண்டு களாக, தனியார் வேன் ஒப்பந்த முறையில் இயக்கப்பட்டுவருகிறது.நேற்று முன்தினம் மாலை, உப்பட்டியிலிருந்து, பொன்னா னிக்கு, 46 மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன், வளைவான சாலைப்பகுதியில் நிலை தடுமாறி, சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த, சிமென்ட் வளையங்களை உடைத்துக் கொண்டு, தேயிலை தோட்டத்தில் புகுந்தது.
இதில், பஸ்சின் முன்பக்க இருக்கைகள் உடைந்தன. மாணவர்களின் அலறல் சப்தம் கேட்டு, அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள், மாணவர்களை மீட்டனர். பின், காயமடைந்த, 46 மாணவர்களையும், '108' ஆம்புலன்ஸ், தனியார் ஜீப்கள், ஆட்டோக்கள் மூலம், பந்த லுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பலத்த காயமடைந்த மூன்று மாணவர்கள், கேரள மாநிலம், சுல்தான்பத்தேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து ஏற்பட்ட பகுதியை ஒட்டி, மின்சார டிரான்ஸ்பார்மர் மற்றும் ஆறு இருந்த நிலையில், தேயிலை தோட்டத்துக்குள் வாகனம் புகுந்ததால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. பந்தலுார் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
'பெர்மிட்' ரத்து?பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்றபோது, விபத்தில் சிக்கிய தனியார் வாகனத்தின் உரிமத்தை ரத்து செய்வது குறித்து, போக்குவரத்து துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.விபத்து குறித்து, நேற்று காலை வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ராமன், மாவட்ட கல்வி அலுவலர் நடராஜ், உதவி தொடக்க கல்வி அலுவலர் பொன் தன்ராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.பஸ்சில் அழைத்துச் செல்வதற்கு மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணம் மற்றும் கூடுதல் மாணவர்களை ஏற்றிச் சென்றது குறித்து, விசாரணை நடத்தப்பட்டது.போக்குவரத்து அலுவலர் வெங்கட்ராமன் கூறுகையில்,
''செல்போனில் பேசியவாறு வேனை டிரைவர் இயக்கியுள்ளார். மேலும் விசாரணை நடத்தி, வாகனத்தின், 'பெர்மிட்டை' ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்,'' என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.