'எச்.எம்., சீட்டில் அமர்ந்து ஆட்டம்':போதை காவலாளி 'சஸ்பெண்ட்'
அரசு பள்ளியில், குடிபோதையில் கலாட்டா செய்த காவலாளி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியைச் சேர்ந்த ரங்கசாமி, 45, இங்குள்ள அரசு பெண்கள் பள்ளி யில், துப்புரவு பணியாளர். ஊத்துக்குளி அரசு ஆண்கள் பள்ளியில், இரவு நேர காவலர் இல்லாததால், இந்த பணியிலும், கூடுதலாக சில நாட்களுக்கு, ரங்கசாமி நியமிக்கப்பட்டார். பள்ளியில், இலவச, 'லேப் - -டாப்'கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த, 17ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, பள்ளிக்கு வந்த ரங்கசாமி, அங்குள்ள மாணவர்களையும், சில ஆசிரியர்களையும், தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். தலைமை ஆசிரியரின் அறைக்குள் புகுந்து, அவரது இருக்கையில் அமர்ந்து, கலாட்டாவில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவர், மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பள்ளி தரப்பில், மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமியிடம் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை நடத்திய அவர், ரங்க சாமியை, 'சஸ்பெண்ட்' செய்து, நேற்று உத்தரவிட்டார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.