!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 23 ஜூலை, 2015

அப்துல் கலாமுக்கு மரியாதை: ஜார்க்கண்ட் பள்ளி வினோதம்

ஜார்க்கண்ட் மாநில பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, 83, மரியாதை செலுத்துகிறோம் என்ற பெருமிதத்தில், அவர் படத்திற்கு மாலை சூட்டி, குங்குமம் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நம் இந்திய மரபு படி, உயிருடன் இருப்பவர்களின் படங்களுக்கு மாலைகள் சூடுவதில்லை; குங்குமம் வைப்பதில்லை. இதுகூட தெரியாமல், ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர், பெண்ணான, நீரா யாதவ், கலாம் படத்திற்கு மாலை சூட்டி, குங்குமம் வைத்துள்ளார்.பள்ளியில், 'ஸ்மார்ட் கிளாஸ்' எனப்படும், தகவல் தொடர்பு வசதிகள் கொண்ட, அதிநவீன வகுப்பறை துவக்க விழாவில், கல்வி அமைச்சர் மட்டுமின்றி, அப்பகுதி, எம்.எல்.ஏ., மணிஷ் ஜெய்ஸ்வால், பள்ளியின் முதல்வர் என, அனைவரும், வரிசையில் நின்று, மாலை சூட்டி, குங்குமம் வைத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும் போது, 'கலாம் போல உயர்ந்த தகுதி படைத்த தலைவர்களை கவுரவிக்கும் விதமாகவே இவ்வாறு செய்தோம். அவர் சிறந்த விஞ்ஞானி, கல்வியாளர், மாணவர்களுக்கு உத்வேகமாக திகழ்பவர். அதனால் தான், அவருக்கு நாங்கள் இவ்வாறு மரியாதை செய்தோம்; இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை' என்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், கடந்த ஆண்டு முதல், பா.ஜ.,வைச் சேர்ந்த, ரகுவர்தாஸ் முதல்வராக உள்ளார். அப்துல் கலாம், தமிழகத்தைச் சேர்ந்தவர்; 2002 - 2007 வரை, ஜனாதிபதியாக இருந்தவர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png