!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 23 ஜூலை, 2015

டாக்டர்களின் 'கோட்'டால் ஆபத்து ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

 டாக்டர்களும், மருத்துவக் கல்லூரி மாணவர்களும், வெள்ளைக் கோட் அணிவதால், நோய் பரவக்கூடும் என, ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெங்களூரு மருத்துவக் கல்லூரி மாணவர் எட்மண்ட் பெர்னாண்டஸ், சமீபத்தில் சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:டாக்டர்களும், மருத்துவக் கல்லூரி மாணவர்களும் பயன்படுத்தும் வெள்ளைக் கோட்டில், கண்ணுக்குத் தெரியாத மாசு பொருட்கள் படிந்துள்ளன. இவை, பெரும்பாலும், பல வாரங்களுக்கு ஒரு முறையே துவைக்கப்படுகின்றன.வெள்ளைக் கோட்டில் படர்ந்துள்ள மாசு பொருட்களால், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நோய் தொற்று பாதிக்கும் ஆபத்து உள்ளது. மருத்துவமனை மூலம் பரவக்கூடிய வியாதிகள் குறித்து, ஒவ்வொரு மருத்துவமனை நிர்வாகமும் அவ்வப்போது பரிசோதனைகள் நடத்த வேண்டும்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு புது வியாதிகள் வருவதை தடுக்க, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், டாக்டர்கள் வெள்ளைக் கோட் அணிய தடை விதிக்க வேண்டும். 
டாக்டர்களும், மாணவர்களும், தாம் அணியும் வெள்ளைக் கோட்களை, நாற்காலிகளில் டேபிள்களில் வைக்கின்றனர்; வெள்ளைக் கோட் அணிந்தவாறு ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர்களுக்கும் செல்கின்றனர். இதன் மூலம், வெள்ளைக் கோட்களில் கிருமிகள் தொற்றும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. தொற்று பரவ, இந்தியாவில் நிலவும் தட்ப வெப்ப நிலையும் சாதகமாக உள்ளது. வெள்ளைக் கோட்டால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து, கடந்த 2007ல், பிரிட்டன் அரசு, அதற்கு தடை விதித்தது. அத்தடையை பின்பற்ற, 2009ல், அமெரிக்க மருத்துவ சங்கம் திட்டமிட்டது. ஆனால், மருத்துவர்களின் எதிர்ப்பால், அந்த முடிவு கைவிடப்பட்டது. இவ்வாறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png