!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 1 ஜூலை, 2015

ஆதிதிராவிடர் பணியிடங்களை நிரப்புங்க! அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
தனியார் மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் காலியாக உள்ள, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப, அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


வேலுாரைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற பேராசிரியர் இளங்கோவன், தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், அரசு உதவி பெறும் கல்லுாரிகள், 160 உள்ளன. இவற்றில், சிறுபான்மை அல்லாத கல்லுாரிகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், 1,186 பேரும், ஊழியர்கள், 684 பேரும் இருக்க வேண்டும். ஆனால், 557 ஆசிரியர்கள் மற்றும் 616 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். மீதியிடங்கள் காலியாக உள்ளன.

விதிமுறைகளின் படி, இந்த காலியிடங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுவை, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் அஜய்கோஷ், உயர் கல்வித்துறை சார்பில், அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகினர்.

பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பணிகள் தொடர்பான பிரச்னைகளில், பொதுநல வழக்குகள் வராது. இருந்தாலும், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் பணியிடங்களில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மட்டுமல்லாமல், இதர பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் நிரப்பவில்லை என்ற பிரச்னை உள்ளது.எனவே, கல்வி வளர்ச்சிக்காக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவுக்கான தற்போதைய காலி இடங்கள் மற்றும் பின்னடைவு காலி இடங்கள், மற்ற பிரிவினருக்கான இடங்களையும் நிரப்ப, அரசு தரப்பு அனைத்து முயற்சிகளை எடுக்க வேண்டும். தற்போதைய கல்வி ஆண்டிலேயே, இந்த முயற்சி நடக்க வேண்டும்.
இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png